தருமபுரியில் மாவட்ட அளவிலான அரசுப் பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக அரசு பணியாளர்கள், ஊழியர்களுக்கு தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
ஆண்டுகளுக்கு 100 மீ, 200 மீ, 800 மீ, 1500 மீட்டர் ஓட்டப் போட்டியும், பெண்களுக்கு 100 மீ, 200 மீ,400 மீ, 800 மீ ஓட்டப் போட்டிகள், இறகுபந்து, கூடைப்பந்து, கால்பந்து, டென்னிஸ், கபடி, மேஜைப்பந்து, வாலிபால் ஆகிய குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளிலிருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன் சான்றிதழ்கள் வழங்கினார்.
போட்டிகளில் முதலிடம் பெற்ற வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்
No comments:
Post a Comment