சேலம் மாவட்டத்தில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாமல், பல ஆசிரியர்கள் டிமிக்கி கொடுத்து வருகின்றனர். ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத ஆசிரியர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களின் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில், போலீசில் சிக்கிய, போலி சான்றிதழ் தயாரிப்பு கும்பல் கொடுத்த தகவலின்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ஆசிரியர்கள் போலி சான்றிதழ் கொடுத்து, பணியில் சேர்ந்தது தெரிய வந்தது.இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து ஆசிரியர்களின் சான்றிதழ்களும், சிறப்பு குழுக்களின் மூலம் சரிபார்க்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில், கடந்த இரு நாட்களுக்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்கியது.இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த ஒருவர், ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காமல், நகல்களை மட்டும் கொடுத்துள்ளார். விசாரணையின் போது, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில், கடந்த இரு நாட்களாக ஆசிரியர் தலைமறைவாக இருந்து வருகிறார். இவரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளதுடன், மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இதே போல், சேலம் மாவட்டம் முழுவதும், பல ஆசிரியர்கள் ஒரிஜினல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காமல், பல்வேறு காரணங்களை கூறி இழுத்தடித்து வருகின்றனர். இவர்களின் பட்டியல்களை உடனடியாக தயாரித்து, மாவட்ட முதன்மைக்கல்வி
அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment