Pages

Friday, January 15, 2016

அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளைப் பராமரிக்க வழிகாட்டு நெறிமுறைக் கூட்டம்

மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகளை தினமும் பராமரித்தல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.


  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆணையாளர் கே.ஜி.மணிவண்ணன் தலைமை வகித்தார். இதில், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், மகளிர் கூட்டமைப்புப் பிரதிநிதிகள், கிராமக் கல்விக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


 இதில், மடத்துக்குளம் ஒன்றியத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் உள்ள 66 பள்ளிகளில் கழிப்பிடங்களைத் தினமும் சுத்தம் செய்யும் பொருட்டு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலமாக சுகாதாரப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

 மேலும், 49 துவக்கப் பள்ளிகளுக்கு மாதாந்திரப் பராமரிப்புத் தொகையாக தலா ரூ. 750-ம், சுகாதார உபகரணங்கள் வாங்க தலா ரூ. 300 வீதம் வழங்கப்படும். 12 நடுநிலைப் பள்ளிகளுக்கு மாதாந்திரத் தொகையாக தலா ரூ. 1000-ம், உபகரணங்கள் வாங்க ரூ. 500 வீதம் வழங்கப்படும். 5 உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாதாந்திரத் தொகையாக தலா ரூ. 1,500-ம், உபகரணங்கள் வாங்க ரூ. 750 வீதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment