Pages

Saturday, January 2, 2016

தேர்தல் பணியில் ஈடுபட ஆசிரியர்களுக்கு அழைப்பு


தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பெண் ஆசிரியர்கள், தங்களுடைய உடல் நிலையை காரணம் காட்டி, மருத்துவ விடுப்பு எடுப்பதில் ஆர்வமாக உள்ளனர். சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. ஜனவரி மாத இறுதியில், இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தி, தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பட்டியலை தயார் செய்து அனுப்பி வைக்குமாறு ஆணையம் வலியுறுத்தி உள்ளது. 


அந்த அடிப்படையில், சேலம் மாவட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என, 24 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் புதுமுகங்களாக உள்ளனர். தேர்தல் பயத்தால், பெண் ஊழியர்கள், எங்களுக்கு இப்பணி வேண்டாம், வேறு யாருக்காவது வாய்ப்பு கொடுங்கள். என் உடல் நிலை சரியில்லை, கர்ப்பமாக உள்ளேன் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி, சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் முறையிட்டு வருகின்றனர். சிலர் கண்ணீர் விடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஏதோ ஒரு காரணத்தை காட்டி, மருத்து விடுப்பில் செல்ல, தங்களுடைய உயர் அதிகாரிகளிடம் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், தேர்தல் பணியில் கட்டாயம் ஈடுபட்டாக வேண்டும். பாரபட்சம் காட்ட முடியாது என அதிகாரிகள் கண்டிப்புடன் கூறி வருகின்றனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறியதாவது: ஒரு மாதத்துக்கு முன்பே, தேர்தல் பணியில் ஈடுபடுவோர் பட்டியலை தயார் செய்து விட்டோம். இப்போது வந்து, எனக்கு வேண்டாம், என்னால் பணியில் ஈடுபட முடியாது என, சிலர் சாக்கு, போக்கு சொல்கின்றனர். மிகவும் முடியாத சூழலில் உள்ளவர்களிடம், அந்த பணிக்கு வேறு யாராவது ஒரு நபரை தேர்வு செய்து சொல்லுங்கள், நாங்கள் விடுவிக்கிறோம் என்பதை தெரிவிக்கிறோம். அவர்களுக்கு இரக்கம் காட்டினால், தேர்தல் பணி ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment