Pages

Saturday, January 2, 2016

தமிழக கிராமங்களில் இன்னும் 55,840 கி.மீ.,க்கு மண் ரோடு தான்


தமிழகத்தில் சென்னையை தவிர்த்து 31 மாவட்டங்களிலும் 55,840 கி.மீ., க்கு மண் ரோடாக இருப்பது ஊரக வளர்ச்சித் துறையினர் ஆய்வில் தெரியவந்தது.



நகர் புறங்களில் உள்ள ரோடுகள் குண்டும், குழியுமாக இருந்தால் உள்ளாட்சி பிரதிநிதிகளை திட்டி தீர்க்கிறோம். ஆனால் தமிழகத்தில் இன்னும் பல கிராமங்களில் மண் ரோடுகளே அதிகளவில் உள்ளன. சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்ட கிராமங்களிலும் மண் ரோடுகள் அதிகம் உள்ளன.சமீபத்தில் கிராமப்பகுதி ரோடுகளின் தன்மை குறித்து ஊரகவளர்ச்சித் துறையினர் ஆய்வு நடத்தினர். மாநிலம் முழுவதும் 1,47,543 கி.மீ., கிராமச்சாலைகள் உள்ளன. இதில் 36,423 கி.மீ., சாதாரண மண் ரோடு, 7,225 கி.மீ., கிராவல் ரோடு, 12,192 கி.மீ. கப்பி ரோடு, 88,860 கி.மீ., தார் ரோடு, 2,841 கி.மீ., சிமென்ட் ரோடு உள்ளன.


அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,049 சாதாரண மண், 974 கி.மீ., கிராவல், 1,261 கப்பி என, 4,284 கி.மீ., விழுப்புரத்தில் 2,337 கி.மீ., சாதாரண மண், 629 கி.மீ, கிராவல், 886 கி.மீ., கப்பி என, 3,852 கி.மீ., மண் ரோடுகளாக உள்ளன. அதேபோல் சேலம், தஞ்சையில் 3 ஆயிரம் கி.மீ., க்கு அதிகமாகவும், சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, திருவாரூர், திருப்பூர், கிருஷ்ணகிரி கடலுாரில் 2 ஆயிரம் கி.மீ., க்கு அதிகமாகவும் மண் ரோடுகள் உள்ளன.

மண் ரோடு குறைந்த மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. அங்கு 152 கி.மீ., சாதாரண மண், 8 கிராவல், 78 கப்பி என, 238 கி.மீ., மட்டுமே மண் ரோடாக உள்ளன.

No comments:

Post a Comment