Pages

Monday, January 4, 2016

வங்கி கணக்கு, ஏ.டி.எம்., எண் கொடுக்காதீங்க...ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்தை இழந்தார் இன்ஜினியர்


அலைபேசி வழியாக வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம்.,எண் பெற்ற மர்ம நபர், அருப்புக்கோட்டை இன்ஜினியரிடமிருந்து ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்தை மோசடி செய்துள்ளார்.அருப்புக்கோட்டை அருகே பனையூரை சேர்ந்தவர் பிரபு. அதானி குரூப் சோலார் கம்பெனியில் இன்ஜினியராக உள்ளார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் கணக்கு வைத்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு இவரது அலைபேசிக்கு அழைப்பு வந்தது. பேசிய நபர், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் இருந்து பேசுவதாக கூறி , கணக்கு எண், ஏ.டி.எம்., எண் மற்றும் அலைபேசி எண்ணை கேட்டுள்ளார். இவரும் அனைத்தையும் கூறி உள்ளார். சிறிது நேரத்தில் இவரது கணக்கில் இருந்து 1 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் பணம் ஆன் லைன் மூலம் மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்தது. அருப்புக்கோட்டை வங்கியில் கேட்க, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள வங்கி கிளையிலிருந்து பணம் பரிமாற்றம் செய்துள்ளதாக, கூறி உள்ளனர். நூதன மோசடி குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் பிரபு புகார் கொடுத்துள்ளார்.அதன் படி போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment