Pages

Saturday, January 30, 2016

30/01/16-தியாகிகள் தினம் - தீண்டாமை உறுதிமொழி


மத்திய அரசு புதிய நடைமுறை ஆதார் அட்டை உள்ளிட்ட 4 ஆவணங்களை சமர்பித்தால் ஒரு வாரத்திற்குள் பாஸ்போட்


புதுடெல்லி: ஆதார் அட்டை உள்ளிட்ட 4 ஆவணங்களை சமர்பித்தால் விண்ணபித்த ஒரு வாரத்திற்குள் பாஸ்போட் பெற்றுக்கொள்ளும் புதிய நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து மத்திய
வெளியுறவுத் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தமது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்....

இந்தியாவின் விடுதலைக்காக போராடிய தியாகிகளை நினைவு கூறும் வகையில் இன்று காலை 11.30 முதல் 11.32 வரை 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த அரசு உத்தரவு

மக்கள் தொகை பதிவேட்டுப் பணி : ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வழக்கு


ஆதார் எண்களை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இணைக்கும் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி  ஆசிரியர்கள் கூட்டணி பொதுச் செயலர் பாலசந்தர் தாக்கல் செய்த பொதுநல மனு:

குறைவான திறன் அடைவு உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆய்வு!


தமிழகம் முழுவதும் மிகவும் குறைவான திறன் அடைவு உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்புத் திறன் மற்றும் கணிதத் திறன்களில் மாணவர்களது அடைவுத் திறனின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை அனுப்பும்படி தொடக்கக் கல்வி இயக்ககம் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

7 வது ஊதியக்குழுவினை அமுல்படுத்த அமைக்கப்பட்ட உறுப்பினர்கள் முதல் கூட்டம் கூடுகிறது!!!


Nodal officers of different ministries and departments will hold first meeting on February 2 to formulate action points for processing 7th Pay Commission recommendations that have bearing on remuneration of about 1 crore central government employees and pensioners.

An Empowered Committee of Secretaries, headed by Cabinet Secretary P K Sinha, has been set up to process the panel's recommendations that would put an additional burden of Rs 1.02 lakh crore on the exchequer.

100 சதவீதம் தபால் ஓட்டு: தேர்தல் அதிகாரி அறிவுரை


'தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அனைவரும், தபால் ஓட்டு போடுவதை உறுதி செய்ய வேண்டும்' என, கலெக்டர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவுரை வழங்கினார்.தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ளதால், சென்னை மண்டலத்திற்குட்பட்ட, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கான பயிற்சி, சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையத்தில், நேற்று நடந்தது.

ஆசிரியர்கள் போராட்டம் இன்று துவக்கம் வகுப்புகள் முடங்கும் அபாயம்


ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், மூன்று நாட்களுக்கு, தமிழகம் முழுவதும் ஆசிரியர் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' சார்பில் மறியல் போராட்டம் நடக்கிறது. இதனால், பிப்., 1ல் அரசு பள்ளிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று துவங்கி, வரும் திங்கள் வரை நீடிக்கும், ஜாக்டோ அமைப்பினர் நடத்தும் போராட்டத்தால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பாதிக்கப்படுவர்.

Friday, January 29, 2016

அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 120 இளநிலை உதவியளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்..001/PR33/2016,  தேதி: 13.01.201

பணி: இளநிலை உதவியாளர்காலியிடங்கள்: 45 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,400. 
தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என்ற ரீதியில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் Word Processing சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர் 
காலியிடங்கள்: 75சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 தர ஊதியம் ரூ.1,300. 
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தங்களது படிப்பை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750. எஸ்சி.,எஸ்டி பிரிவினருக்கு ரூ.500. இதனை Registrar, Anna University என்ற பெயரில் Chennai-ல் மாற்றத்தக்க வையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http:/www.annauniv.edu என்றஇணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:The Registrar,Anna University,CHENNAI- 600025.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/JA-ADV-2016.pdf என்ற லிங்கை செய்து தெரிந்துகொள்ளவும்.

மார்ச் மாதத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் : கல்வி இயக்குனரகம் முடிவு!


நாடு முழுவதும் சிறுவர் முதல் பெரியோர்
வரை அனைவருக்கும் ஆதார் எண்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆதார்
புகைப்படம் எடுப்பதற்காக சிறப்பு மையங்கள்
திறக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 2016 மே
இறுதிக்குள் அனைவருக்கும ஆதார் எண்
கொடுக்கும் பணி முடிக்க வேண்டும் என்று
மாநில அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஆனால் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில்
1.20 கோடி பேர் இன்னும் ஆதார் எண்ணுக்கு
பதிவு செய்யவில்லை என்றும், இதில் 60
சதவீதம் மாணவர்கள் உள்ளதாக தெரியவந்தது.
மாநிலம் முழுவதும் ஆரம்பம், நடுநிலை
மற்றும் உயர்நிலை பள்ளியில் படிக்கும்
மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண்
கொடுப்பதற்காக சிறப்பு முகாம் நடத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களை அலையவிடாமல்
தவிர்க்கும் வகையில் அந்தந்த பள்ளிகளுக்கு
நேரில் சென்று புகைப்படம் எடுக்கும் திட்டம்
செயல்படுத்த கர்நாடக மாநில
பொதுகல்விதுறை இயக்குனரக ஆணையர்
கே.எஸ்.சத்யமூர்த்தி முடிவு செய்தார்.
இதுதொடர்பாக உயரதிகாரிகளுடன்
ஆலோசனை நடத்தினார். அதில் பள்ளிகளுக்கு
நேரில் சென்று ஆதார் புகைப்படம் எடுக்கும்
திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் மாநிலம்
முழுவதும் படிக்கும் மாணவ, மாணவிகளை
ஆதார் எண் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது

மேல்நிலைத் பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை ஆன்-லைனில் 30.01.2016 முதல் 01.02.2016 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

ஜாக்டோ தொடர்பு மறியல் காரணமாக 1.2.2016 அன்று பள்ளியை பார்த்துக் கொள்ள மாநில திட்ட இயக்குனர் செயல்முறைகள்


மக்கள் தொகை கணக்கு திருத்தம் & குடும்ப அட்டை எண் இணைத்தல் தொடர்பான ஆசிரியர்களுக்கு வேலை நேரம் அனுமதி


Thursday, January 28, 2016

Passport First – Verification Later for First Timers


Passport First – Verification Later for First Timers – The police verification process, which can take place after the applicant has acquired the new passport.

தொடக்கக்கல்வி-2015-2016 நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப்பண்பு வளர் பயிற்சி-SSA வுடன் இணைந்து நடத்துதல்-மாநில அளவிளான கருத்தாளர் பயிற்சிக்கு தலைமையாசிரியர்களை தேர்ந்தெடுத்து அனுப்புதல்


சமையல் எரிவாயு சிலிண்டர்... இனி ஆன்லைனில் பணம் செலுத்தலாம்!


சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்வதற்கான தொகையை இனி ஆன்லைனில் செலுத்துவதற்கானத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

வீட்டுக் கடன்... சுலபமாக திரும்பச் செலுத்த 3 வழிகள்!


லட்சக்கணக்கான தொகையை மொத்தமாக புரட்டி வீடு வாங்க முடியாது என்பதாலும், திரும்பக் கட்டும் மாதத் தவணைக்கு வட்டி மற்றும் அசலில் வரிச் சலுகை கிடைக்கிறது என்பதாலும் பலர் வீட்டுக் கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்கவே பலரும் விரும்புகிறார்கள்.

தற்கொலை எண்ணம்; மாணவர்களுக்கு இலவச கவுன்சிலிங்


தற்கொலை எண்ணம் கொண்ட, மாணவர்கள் தொடர்பு கொண்டு, ஆலோசனை பெறும் வகையில், இலவச ஆலோசனை மையத்தை, ஓய்வு பெற்ற பேராசிரியர் துவக்கி உள்ளார்.

கல்விச்சான்றிதழ் நகல் வழங்கல்


வெள்ளத்தில் மாணவர்கள் இழந்த கல்விச்சான்றிதழ் நகல்களை, விண்ணப்பித்த இடங்களிலேயே இன்று (27-01-16) முதல் பெற்றுக் கொள்ளலாம் என பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

ஜனவரி 30,31 பிப்ரவரி 1ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் தொடர் மறியல்


ஜனவரி 30,31,பிப்ரவரி 1 ஆகிய மூன்று நாட்கள் வழக்கமாக வந்து போகும் நாட்கள் அல்ல.

*இடைநிலை ஆசிரியர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் நாள்.

இடைநிலை ஆசிரிய நண்பர்களே கடந்த 22 வருடங்களாக நாம் பெற்று வந்த மத்திய அரசிற்கு இணையான ஊதியம் ஆறாவது ஊதியக் குழு நடைமுறைப் படுத்தப் பட்டதில் பறிக்கப்பட்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் மற்றும் இந்திய புள்ளியியல் பணி 2016 தேர்வுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன்
( யூபிஎஸ்சி )

இந்திய பொருளாதாரம் மற்றும் இந்திய புள்ளியியல் பணி 2016 தேர்வுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Wednesday, January 27, 2016

அரசு இ-சேவை விவரங்களை அறிய புதிய கைபேசி செயலி அறிமுகம்


தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழை முதல் பாடமாக தேர்வெழுத 7 ஆயிரம் மாணவர்களுக்கு விலக்கு - உயர் நீதிமன்றம்


சிறுபான்மையின பள்ளிகளில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழை முதல் பாடமாக தேர்வு எழுத விலக்கு அளிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 7 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டும் விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

5 சதவீத மதிப்பெண் சலுகையில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று

24.09.2014 தேதிவரை நியமனம் பெற்ற அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் முன் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மறியல்

இப்படியும் ஊழலை ஒழிக்கலாம்: வழிகாட்டுகிறது கேரளத்தின் கிழக்கம்பல கிராமம்!


கேரள மாநிலத்தில் அரசியல் கட்சிகளின் ஆட்சிக்காலம் பெரும்பாலும் அல்பாயுசு தான். யாரும் இங்கு தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததே கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வரும். படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலத்தில், திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது கிழக்கம்பலம் என்கிற கிராமம்.

மாணவர் அழுத்தங்களை குறைக்கும் வகையில் இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு


இலங்கையில் மாணவர்களுக்கான அழுத்தங்களை குறைக்கும் வகையில் கல்வியில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டிருக்கிறார். மாணவர் அழுத்தங்களை குறைக்கும் வகையில் இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக ஐந்தாம் வகுப்பு மாணவர்களும் பெற்றோரும் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் மற்றும் 6 வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் பாடங்களின் எண்ணிக்கை குறித்த அழுத்தங்கள் பற்றி கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்த ஜனாதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த அழுத்தங்களை குறைக்கும் வகையில் கல்வி முறைமையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர் கல்வி அமைச்சை சேர்ந்தவர்களிடம் கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொண்ட கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் பிபிசியிடம் கூறினார்.

பள்ளிகளில் முன்னாள் ராணுவத்தினருக்கு பணி?


பள்ளிகளில் உடற்பயிற்சி அளிப்பது, தேசத்துக்காக தியாகம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற பணிகளில் முன்னாள் ராணுவத்தினரை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

'செட்' தேர்வு அவகாசம் தேர்வர்கள் அதிருப்தி


பிப்ரவரி மாதம் நடக்கவுள்ள, 'செட்' தேர்வுக்கு, குறுகிய கால அவகாசமே இருப்பதால், தேர்வர்கள் அதிருப்தியில் உள்ளனர். கல்லுாரிகளில், உதவிப் பேராசிரியர் பணி தகுதித்தேர்வான, 'செட்' தேர்வு, மாநில அரசு சார்பில் நடத்தப்படுகிறது. பாரதிதாசன், பாரதியார் உட்பட பல பல்கலைகள், மூன்றாண்டுகளுக்குஒரு முறை தேர்வு நடத்துகின்றன.

'பேஸ்புக் - வாட்ஸ் ஆப்' ஜோடி வாடிக்கையாளருக்கு வசதிகள்


தகவல் அனுப்ப உதவும், 'ஆப்'களால் எழுந்துள்ள கடும் போட்டியை சமாளிக்க, முன்னணி சமூக வலைதளமான, 'பேஸ்புக்' உடன் இணைந்து, தகவல்கள், ஆவணங்கள் பரிமாற்றம், 'வீடியோ' அழைப்பு உள்ளிட்ட பல்வேறு புதியவசதிகளை, 'வாட்ஸ் ஆப்' ஏற்படுத்தித் தந்துள்ளது.மொபைல் போனில் தகவல் அனுப்ப உதவும், 'வாட்ஸ் ஆப்'புக்கு போட்டியாக, 'லைன், வைபர், மெஸேஜ்மீ, வாக்ஸர், ஹேடெல், டெக்ஸ்ட்நவ், டாக்கடோன், கீக்' என, ஏராளமான, 'ஆப்'கள், மக்களிடையே பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில், வாட்ஸ் ஆப் முன்னணியில் உள்ளது.சமூக வலைதளங்களில் ஜாம்பவானாக திகழும், பேஸ்புக், 'வாட்ஸ் ஆப்'பை, பெருந்தொகைக்கு விலைக்கு வாங்கியது.

Tuesday, January 26, 2016

இன்று 67வது குடியரசுதினம்: இந்திய தேசம்... இளைஞர்களின் நேசம்

''நாட்டுப்பற்று மிக்க நுாறு இளைஞர்களை தாருங்கள். இந்தியாவையே உயர்த்திக்காட்டுகிறேன்'' என்றார் சுவாமிவிவேகானந்தர். இன்றைக்கு உலகில் அதிக இளைஞர்கள் வாழும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த இளம் படை சாதிக்கும் பட்டாளமாக உருவெடுக்க வேண்டுமென குடியரசு தினத்தில் சபதம் ஏற்போம்.

'மொபைல் ஆப்'பில் 'இ - சேவை' மைய தகவல்

சென்னை: அரசு இ - சேவை மையங்களில், பல்வேறு வகையான அரசு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர, சொத்து வரி, தொழில் வரி, கம்பெனி வரி, மின் கட்டணம் ஆகியவற்றையும், இ - சேவை மையத்தில் செலுத்தலாம்.

பள்ளிகளில் 'தமிழ் வாசித்தல் திறன' ஆய்வு செய்ய மாநிலம் முழுவதும் குழு ஆய்வு


போலிச் சான்றிதழ் விவகாரம்:கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறை

போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இருவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உடுமலை குற்றவியல் நடுவர் மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

'ஆல் பாஸ்' திட்டம் மாநிலங்களுக்கு கெடு

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுகுறித்த அறிக்கையை, ஒரு மாதத்திற்குள் அனுப்பும்படி, மாநிலங்களுக்கு, மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

நேரடி நியமனம் மூலம் உதவி பட்டு ஆய்வாளர் மற்றும் இளநிலைபட்டு ஆய்வாளர் பணியிடம் நிரப்புவதற்கான விளம்பர அறிக்கை

துணைவேந்தர்கள் இன்றி 8 பல்கலைகளின் பணி முடக்கம்

பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பதில், புதியவர்கள் நியமிக்கப்படாததால், எட்டு பல்கலைகளில், துணைவேந்தர் இடங்கள் காலியாக உள்ளன. தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில், 22 பல்கலைகள் உள்ளன. இவற்றில் வேளாண், மருத்துவம், சட்டம், கால்நடை மருத்துவம், மீன்வளம் மற்றும் உடற்கல்வி பல்கலைகளும் அடங்கும். திருச்சியில் உள்ள தேசிய சட்டப்பள்ளியும் பல்கலை அந்தஸ்தில் உள்ளது.

சான்றிதழுக்கு ரூ.6 லட்சம்: போலி பேராசிரியரை தப்பவிட்ட நிர்வாகம்

நாமகிரிப்பேட்டை;நாமக்கல், அரசு கல்லுாரியில், உதவி பேராசிரியர் பணியில் சேர, பிஎச்.டி., போலி சான்றிதழ் கொடுத்த பேராசிரியரை, கல்லுாரி நிர்வாகம் தப்பவிட்டதும் தெரியவந்துள்ளது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், 2011ம் ஆண்டு தாவரவியல் உதவி பேராசிரியராக, நீலகிரி மாவட்டம், குன்னுாரைச் சேர்ந்த ஜோஸ்பீன் கமோலியா சேர்ந்தார். இவரது, பிஎச்.டி., சான்றிதழின் உண்மை தன்மை அறியும் பொருட்டு, சம்பந்தப்பட்ட, பீஹார் வீர் குன்வார் சிங் பல்கலைக்கு அனுப்பப்பட்டது.

பள்ளிக்கல்வி- உயர்கல்வியில் தமிழகம் முதலிடம் சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா


பல்வேறு திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளின் காரணமாக பள்ளிக்கல்வியிலும் உயர்கல்வியிலும் தமிழகம் முதலிடத்தை பெற்றிருப்பதாக தமிழக சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலுரை.


இந்த அரசு ஏழை, எளியவர்களுக்கான அரசு. இல்லாதோரை கை தூக்கிவிடும் அரசு. குறை உள்ளவர்களை நிறைவாக்கும் அரசு. ஒடுக்கப்பட்ட\மக்களின் நலன்களை காக்கும் அரசு. எனவே தான், வளர்ச்சி என்பதை வெறும்பொருளாதார வளர்ச்சியாக நான் பார்ப்பதில்லை. மாநிலத்தின் மொத்தஉற்பத்தியின் வளர்ச்சி, அதாவது மாத்திரம் ஆரோக்கியமான வளர்ச்சிஅல்ல. நாட்டு முன்னேற்றத்திற்கு மொத்த உற்பத்தி வளர்ச்சி, பயன்அளிக்கலாம். ஆனால், வளர்ச்சி என்பது ஒவ்வொருவரையும் சென்றடையவேண்டும். அடித்தட்டில்உள்ள மக்கள் பொருளாதார வளர்ச்சியின் பயனைப்பெற வேண்டுமென்றால் அவர்கள் கல்வியிலும், உடல் நலத்திலும் சிறந்துவிளங்க வேண்டுமென்பது இன்றியமையாததாகும். 

கல்வி மற்றும் மக்களின் உடல்நலம் ஆகியவற்றில் ஏற்படும் வளர்ச்சி சமுதாய வளர்ச்சிக் குறியீட்டைநிர்ணயிக்கும். எங்கு சமுதாய குறியீடுகள் விரைந்து வளர்ச்சி அடைகின்றனவோ அங்கு தான் ஏற்றத்தாழ்வற்ற நிலை ஏற்படும். அப்போதுதான் எல்லோரும் எல்லாமும் பெற முடியும். எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஒர் நிலை‛ என்ற குறிக்கோளை அப்போது தான் எய்த இயலும். எனவே தான் கல்விவளர்ச்சிக்கு எனது தலைமையிலான அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவருகிறது.


அனைவருக்கும் தரமான கல்வி வழங்கிட வேண்டுமெனில் பள்ளிகளின்உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். போதிய ஆசிரியர்கள் நியமனம்செய்யப்பட வேண்டும். மாணவ மாணவியரின் இடைநிற்றலை குறைத்திடவேண்டும். மாணாக்கர்களின் கற்கும் திறன் உயர்த்தப்பட வேண்டும்.இவையெல்லாம் நிறைவேற்றிட வேண்டும் என்ற காரணத்தால் தான், கடந்த5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கென 84,568 கோடி ரூபாய் எனதுஅரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியின் 5 ஆண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை39,058 கோடி ரூபாய் தான். அதாவது இந்த 5 ஆண்டுகளில் எனது ஆட்சியில்கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில் ஒதுக்கியதை விட 116 சதவீத உயர் அளவுஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே தான் தொடக்க கல்வி, நடுநிலைக் கல்வி,இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி என அனைத்து நிலைகளிலும்சேர்க்கை விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது; இடைநிற்றல் விகிதம் கணிசமாககுறைந்துள்ளது.


இவற்றிற்குக் காரணம் இந்த அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் தான். கடந்த 56 மாதங்களில் 26.96 லட்சம் பள்ளி மாணவ மாணவியருக்கு 4,723 கோடி ரூபாய் செலவில், விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை இடைநிற்றல்இன்றித் தொடர சிறப்பு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் எனது அரசால்அறிமுகம் செய்யப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 முதல்12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு மொத்தம்5,000 ரூபாய் கல்வி ஊக்கத் தொகையாக அவர்களின் பெயரில் முதலீடு செய்யப்படுகிறது. 

இத்திட்டத்தின் கீழ், ஐந்தாண்டுகளில் 1 கோடியே13 லட்சத்து 76 ஆயிரம் மாணவ, மாணவியர் 1,810 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாகப் பெற்று பயனடைந்துள்ளனர்.2010-2011-ஆம் ஆண்டு ஒரு இணைச் சீருடை வழங்கப்பட்டு வந்தநிலையில், தற்போது பள்ளி மாணவ மாணவியருக்கு 4 இணைச் சீருடைவழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் இதற்கென 1,698 கோடிரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவியருக்கு விலையில்லா பாட நூல்கள் வழங்கப்படுகின்றன.


2012-2013-ஆம் ஆண்டு முதல் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் வழங்கும்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அவை வழங்கப்பட்டு வருகின்றன. விலையில்லாபுத்தகப் பை, கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ், நில வரைபட புத்தகம்உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், வழங்கும் திட்டம் 2012-13-ஆம் ஆண்டில்அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது போலவே ஓர் இணைக் காலணிகள் வழங்கும் திட்டம் 2012-2013-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவையன்றி, விலையில்லா மிதிவண்டிகள்,கட்டணமில்லாப் பேருந்து பயணச் சலுகை, சத்தான மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.


பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு அதிக செலவிலானதனியார் பள்ளிகளை நாடுவதற்கான முக்கிய காரணம் ஆங்கில வழி போதனைஎன்பதால், அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கில வழிக் கல்வி வழங்கும் பொருட்டுதேவைக்கேற்ப 12,092 ஆங்கில வழிப் பிரிவுகள், ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2.64 லட்சம் மாணாக்கர்கள் இதில் பயின்று வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் 221 தொடக்கப் பள்ளிகள் புதிதாகதொடங்கப்பட்டுள்ளன; 112 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 810 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.


தேவைக்கேற்ப பள்ளிகளை அமைப்பதோடு, பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை வழங்கிடவும் எனது அரசு முன்னுரிமை அளிக்கிறது. கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச் சுவர்,மாற்றுத் திறனாளிகளுக்கென சாய்வு தளங்கள் ஆண்/ பெண் குழந்தைகளுக்கென தனித்தனியே கழிவறைகள் போன்ற உட்கட்டமைப்புவசதிகள் 4,166 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறந்த கல்வி வழங்கப்பட ஆசிரியர்கள் காலத்தே நியமிக்கப்பட வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் 72,843 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 14,711 ஆசிரியர் அல்லா பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வியில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு முன்னோடிதிட்டங்களின், காரணமாகத் தான் தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் ஒரு சிறந்தமாநிலமாக திகழ்கிறது.


உயர்கல்வியைப் பொறுத்தவரை, தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்பதை நான் முதலில் பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன். 2011-ஆம் ஆண்டு உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம், தமிழ்நாட்டில் 18 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அப்போது இந்திய அளவில் இந்த சதவீதம் 15 என இருந்தது.தற்போது இந்திய அளவில் மொத்த மாணவர் சேர்க்கை 23.6 சதவீதம் என்றுஉள்ளது. 

ஆனால், தமிழ்நாட்டில் இது 44.8 என்ற சதவீதத்தை அடைந்து,இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. அதாவது,இந்திய அளவில் கடந்த 5 ஆண்டுகளில் 8.6 சதவீத அளவிற்கே உயர் கல்விமாணவர் சேர்க்கை உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இது26.8 சதவீதம் உயர்ந்துள்ளது. இத்தகைய மகத்தான வளர்ச்சிக்கு காரணம்எனது தலைமையிலான அரசு நிறைவேற்றிய பல்வேறு திட்டங்கள் தான்என்பதை, நான் இங்கே உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியிலும், தற்போதும் உயர்கல்வி தொடர்பான சில புள்ளி விவரங்களை தெரிந்து கொண்டால் தற்போது நான்தெரிவித்த வியத்தகு சாதனை எப்படி சாத்தியமாயிற்று என்று புலப்படும். கடந்த 2006 முதல் 2011 வரையிலான ஆண்டுகளில், கடந்தமைனாரிட்டி திமுக ஆட்சியின் போது, உயர் கல்விக்கு செலவிடப்பட்ட தொகை6,142 கோடி ரூபாய். கடந்த 5 ஆண்டுகளில்அதிமுக ஆட்சியில், செலவிடப்பட்ட தொகை 14,609 கோடி ரூபாய். இதை கவனத்தில் கொள்ளவேண்டும். குறித்துக் கொள்ள வேண்டும். 

ஐந்து ஆண்டுகால மைனாரிட்டி திமுக ஆட்சியில் ஒட்டுமொத்தமாக கல்விக்காக செலவிடப்பட்டத் தொகை 6142 கோடிரூபாய். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அஇஅதிமுக ஆட்சியில் செலவிடப்பட்டதொகை 14,609 கோடி ரூபாய். முந்தைய திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட புதியகலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 10. தற்போது எனது ஆட்சியில் புதியதாக துவங்கப்பட்டுள்ள கல்லூரிகள் 39. முந்தைய திமுக ஆட்சியில் புதியதாக துவங்கப்பட்ட பாடப் பிரிவுகள் 26. தற்போது அதிமுக ஆட்சியில், புதியதாக துவங்கப்பட்டுள்ள பாடப் பிரிவுகள் 959. கடந்த திமுக ஆட்சியில்கட்டடங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை வெறும் 7 கோடி ரூபாய். 

தற்போதுஅதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ள தொகை 220 கோடி ரூபாய்; கடந்த 5ஆண்டுகளில் கணக்கிட்டுப் பார்த்தீர்களானால் திமுக ஆட்சியின் போதுசெலவிடப்பட்டது 7 கோடி ரூபாய். ஆனால் அதிமுகஆட்சியில் செலவிடப்பட்டத் தொகை 220 கோடி ரூபாய். அன்றைய திமுகஆட்சியில் 20,626 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடமற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போதுஅதிமுக ஆட்சியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டமாணாக்கர்களின் எண்ணிக்கை 43,586. அன்றைய திமுக ஆட்சியில் எந்த ஒருபுதிய அரசு பொறியியல் கல்லூரியும் நிறுவப்படவில்லை. 

ஆனால் தற்போது, அதிமுக ஆட்சியில் 4 புதிய அரசுபொறியியல் கல்லூரிகள், துவங்கப்பட்டுள்ளன. முந்தைய திமுக ஆட்சியில்78,045 பொறியியல் பயிலும் முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு மட்டுமேபயிற்சிக் கட்டண விலக்கு வழங்கப்பட்டது. தற்போது எனது அரசால்பயனடைந்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 2,84,609. அப்போது திமுகஆட்சியில் இத்திட்டத்திற்காக செலவிடப்பட்ட தொகை 149 கோடி ரூபாய். தற்போதுஅதிமுக ஆட்சியில் செலவிடப்பட்ட தொகை 2,268 கோடி ரூபாய்.முந்தைய திமுக ஆட்சியில் நிறுவப்பட்ட அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரிகள் 8. தற்போது அஇஅதிமுக ஆட்சியில் நிறுவப்பட்டுள்ளவை 11.அன்றைய திமுக அரசால், புதிய பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்குஒப்பளிக்கப்பட்ட பணியிடங்கள் 568. தற்போது எனது அரசால் ஒப்பளிக்கப்பட்டபணியிடங்கள் 1,153. இவ்வாறு அவர் பேசினார்.

இன்ஜி., படிக்க புதிய திறன் தேர்வு;மத்திய அரசு அடுத்த அதிரடி

தேசிய அளவில், ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர, அடுத்த ஆண்டு முதல், புதிதாக தேசிய திறன் தகுதி தேர்வு அமலாக உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைகளில் சேர, நுழைவுத்தேர்வு எழுத வேண்டியதில்லை. ஆனால், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான. ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.எம்.எஸ்., - ஐ.ஐ.ஐ.டி.,- என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு எழுத வேண்டும்.



இதில், என்.ஐ.டி.,- ஐ.ஐ.ஐ.டி., போன்றவற்றில் சேர, முதற்கட்ட ஜே.இ.இ., முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றாலே போதும். ஆனால், மற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, இரண்டாம் கட்ட ஜே.இ.இ., அட்வான்ஸ்ட் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.


இந்த முறையை. 2017 - 18ம் கல்வி ஆண்டு முதல் மாற்ற, மத்திய மனிதவள அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அனைத்து மாணவர்களும் முதற்கட்ட ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு பதில், என்.ஏ.டி., எனப்படும் தேசிய திறன் தேர்வை எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்ற பின், இரண்டாம் கட்ட தேர்விலும் தேர்ச்சி பெற்ற பிறகே மாணவர் சேர்க்கை நடத்தப்படும். முதற்கட்ட தேர்வில் வெற்றி பெற்றால், மாநில உயர்கல்வி நிறுவனங்களில் மட்டும் சேர்ந்து கொள்ளலாம்.


இந்த முடிவு குறித்த அறிக்கை, மத்திய மனிதவள அமைச்சகத்தின் மூலம், பார்லிமென்ட் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், 2017 - 18ல் அமலுக்கு வரும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன

குறுஞ்செய்தியில் வாக்காளர் எண்ணைப் பதிவு செய்யுங்கள்


செல்லிடப்பேசி குறுஞ்செய்தி மூலமாக வாக்காளர் எண்ணைப் பதிவு செய்தால், வாக்குச் சாவடி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அவ்வப்போது அனுப்பப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.  இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

எஸ் எஸ் ஏ பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை அடுத்த மூன்று மாதங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.




10th Common Half Yearly Examination question paper and Answer Key 2015-2016: (UPDATED MATHS KEY VERSION I, VERSION 2,VERSION 3)


MATHS





ENGLISH - PAPER -II



ENGLISH - PAPER - I  

PAPER - I QUESTION PAPER DOWNLOAD........ 


PAPER - I KEY ANSWER DOWNLOAD ......1 PAGES VERSION 1
 updated (chinnaraj)

PAPER -I KEY ANSWER DOWNLOAD .....4 PAGES VERSION 2


 
TAMIL - PAPER - I &II 

CLICK HERE TO DOWNLOAD 10 STD COMMON QUARTERLY EXAM KEY ANSWER PAPER DOWNLOAD - TAMIL QUESTION  PAPER- II  2015-16  


CLICK HERE TO DOWNLOAD 10 STD COMMON QUARTERLY EXAM KEY ANSWER PAPER DOWNLOAD - TAMIL   PAPER- II KEY ANSWERS 1 PAGE   2015-16  UPDATED NEW (1 PAGE)VERSION 5


CLICK HERE TO DOWNLOAD 10 STD COMMON QUARTERLY EXAM KEY ANSWER PAPER DOWNLOAD - TAMIL KEY PAPER- I  VERSION 4 

தொடக்கக்கல்வி - ஆசிரியர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை கண்டறிய இயக்குனர் உத்தரவு - ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவங்கள் வெளியீடு.







2015 - 16ம் நிதியாண்டில், பி.எப்., வட்டி 9 சதவீதம்?


புதுடில்லி: இ.பி.எப்.ஓ., எனப்படும், வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நடப்பு, 2015 - 16ம் நிதியாண்டில், பி.எப்., முதலீடுகளுக்கு, 9 சதவீத வட்டி வழங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. 
இ.பி.எப்.ஓ., அறக்கட்டளை நிர்வாகியும், பாரதிய தொழிலாளர் சங்க செயலருமான பானுசுரே, டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தொடக்க நிலை மாணவர்களுக்கு எளிய drawing பயிற்சி.

ENGLISH GRAMMER PAPRT - I


SCIENCE LESSONS BOOK BACK QUESTIONS ANSWERS

10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் மற்றும இரண்டாம் திருப்பு தேர்வுகள் பிப்ரவரி 1ல் தொடக்கம் :


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் & இரண்டாம் திருப்புத் தேர்வுகளை பிப்ரவரி மாதம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

  10 மற்றும் 12 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகளையும் பிப்ரவரி மாதமே நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவிட்டு அதற்கான தேதிகளையும் அறிவித்துள்ளது.

  முதல் திருப்பத் தேர்வு:

 பிப்ரவரி 1 மொழித்தாள் -1,

2ம் தேதி மொழித்தாள்-2,

3ம் தேதி ஆங்கிலம் தாள்-1,

4ம் தேதி ஆங்கிலம் தாள் -2


6ம் தேதி கணக்கு,

8ம் தேதி அறிவியல்,

 10ம் தேதி சமூக அறிவியல்.

 இரண்டாம் திருப்பத் தேர்வு :

பிப்ரவரி 15ம் தேதி கணக்கு,

16ம் தேதி அறிவியல்,

 17ம் தேதி சமூக அறிவியல்,

மார்ச் 5ம் தேதி மொழித்தாள் -1,

7ம் தேதி மொழித்தாள் -2,

8ம் தேதி ஆங்கிலம் தாள் -1,

 9ம் தேதி ஆங்கிலம் தாள் -2 தேர்வு எழுத வேண்டும்.


இந்த தேர்வுகள் முடிந்ததும் செய்முறைத் தேர்வுக்கும், அதைத் தொடர்ந்து பொதுத் தேர்வுக்கும் தயாராக வேண்டும். தொடர்ச்சியாக மாற்றி மாற்றி தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளதால் இரவு பகலாக கண்விழித்து படிக்கும் நிலையும், மன உளைச்சலுக்கு ஆளாகும் அவலமும் ஏற்பட்டுள்ளது.

7 ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட்'

வேலுார்: பள்ளிக்கு தாமதமாக வந்த ஏழு ஆசிரியர்களுக்கு, ஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக, கல்வித் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மலைப்பகுதி பள்ளிக்கு செல்லாமல் 'பினாமி' நியமித்த தலைமை ஆசிரியை


நாமகிரிப்பேட்டை: மலைப்பகுதியில் உள்ள, உறைவிடப்பள்ளி தலைமையாசிரியை, பள்ளிக்கு செல்லாமல், தன்னிச்சையாக ஒருவரை நியமித்து, சம்பளம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் அடுத்த, போதமலை மலைப்பகுதியில் உள்ள கீழூரில், மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்காக, உறைவிட துவக்கப்பள்ளி செயல்படுகிறது.

257 சத்துணவு அமைப்பாளர் காலிப் பணியிடம்: ஜன. 29 வரை விண்ணப்பிக்கலாம்


திண்டுக்கல் மாவட்ட சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 257 அமைப்பாளர் காலிப் பணியிடங்களுக்கு ஜன. 29ஆம் தேதி வரை தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR) தொடர்பாக RTI மூலம் கேட்கப்பட்ட கேள்வி


அடைவுத் தேர்வு - மாணவர்களின் கல்வி தரத்தைக் காணும் ஓர் அளவு கோலா?

அதேஇ - மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் வகையில் வண்ண சித்திரங்களை வகுப்பறைகளில் உடனடியாக வரைய இயக்குனர் உத்தரவு - பள்ளிகளை தேர்ந்தெடுத்தல் மற்றும் செலவீன விவரம் - செயல்முறைகள்

CPSல் ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு CPS தொகையினை வழங்கத் தேவையான அரசாணை வெளியிட DATA CENTRE ஆணையாளர் கேட்டுள்ளார்!!!


CPS தொடர்பான அனைத்து அரசாணைகளும் நிதித்துறை மூலம் வெளியிடப்பட்டு கருவூலம் மற்றும் கணக்குத்துறை வாயிலாக செயல்படுகிறது.


CPSல் ஓய்வு பெற்ற மற்றும் மரணம் அடைந்தவர்களுக்கு  CPS தொகையினை வழங்கத் தேவையான அரசாணை வெளியிட DATA CENTRE ஆணையாளர் நிதித்துறை முதன்மைச்செயலாளரை கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.

10ம் வகுப்பு திருப்ப தேர்வுகள்: பிப்ரவரி 1ல் தொடக்கம்


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் திருப்பத் தேர்வுகளை பிப்ரவரி மாதம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் டிசம்பர் மாதத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நடப்பது வழக்கம். 


கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்தது. அப்போது நவம்பர் இறுதி வாரம் மற்றும் டிசம்பர் 1, 2, 3, 4 தேதிகளில் மட்டும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெருத்த மழை சேதம் ஏற்பட்டது. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக 31 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக, கடந்த டிசம்பர் மாதம் நடக்க வேண்டிய அரையாண்டு தேர்வுகளை ஜனவரி 11ம் தேதி தொடங்கி 27ம் தேதிவரை நடத்த அரசு உத்தரவிட்டது. இதன்படி, அரையாண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. அடுத்த வாரம் தேர்வுகள் முடிய உள்ளன. இதற்கிடையே பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகளை பிப்ரவரி மாதமே நடத்தி  முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டு அதற்கான தேதிகளையும் அறிவித்துள்ளது. இதனால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் அரையாண்டு தேர்வுகளை எழுதி வரும்போதே, செய்முறை தேர்வுக்கும் தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், இந்த கல்வியாண்டுக்கான திருப்பத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி முதல் திருப்பத் தேர்வுகள் பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடத்த வேண்டும் என்றும், இரண்டாம் திருப்பத் தேர்வை பிப்ரவரி 15ம் ேததி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதன்படி, முதல் திருப்பத் தேர்வில் பிப்ரவரி 1ம் தேதி மொழித்தாள் -1, 2ம் தேதி மொழித்தாள் -2, 3ம் தேதி ஆங்கிலம் தாள் -1, 4ம் தேதி ஆங்கிலம் தாள் -2, 6ம் தேதி கணக்கு, 8ம் தேதி அறிவியல், 10ம் தேதி சமூக அறிவியல் பாடத்தில் தேர்வு எழுத வேண்டும். 


இரண்டாம் திருப்பத் தேர்வில் பிப்ரவரி 15ம் தேதி கணக்கு, 16ம் தேதி அறிவியல், 17ம் தேதி சமூக அறிவியல், மார்ச் 5ம் தேதி மொழித்தாள் -1, 7ம் தேதி மொழித்தாள் -2, 8ம் தேதி ஆங்கிலம் தாள் -1, 9ம் தேதி ஆங்கிலம் தாள் -2 தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வுகள் முடிந்ததும் செய்முறைத் தேர்வுக்கும், அதைத் தொடர்ந்து பொதுத் தேர்வுக்கும் தயாராக வேண்டும். தொடர்ச்சியாக மாற்றி மாற்றி தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளதால் இரவு பகலாக கண்விழித்து படிக்கும் நிலையும், மன உளைச்சலுக்கு ஆளாகும் அவலமும் ஏற்பட்டுள்ளது.  

ஆசிரியரா, பேராசிரியரா: பட்டதாரிகள் குழப்பம்


மத்திய அரசின், ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்க உள்ள அதே நாளில், தமிழக அரசின், உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் சார்பில், 'சிசெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு, நவ., 3ல் வெளியானது.

பள்ளிக்கல்வி - 2016 ஆண்டிற்கான மாவட்ட கல்வி அலுவலர் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் - இயக்குனர் செயல்முறைகள்

சி.இ.ஓ., - டி.இ.ஓ., பணியிடங்கள் 57 காலி: பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம்

பள்ளிக் கல்வித் துறையில், 57 உயர் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பொதுத் தேர்வு மற்றும் தேர்தல் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

உண்மை தன்மை கண்டறிவதில் அலட்சியம்

ஆசிரியர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதில், தலைமை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுத்துறையின் அலட்சியப் போக்கின் காரணமாகவே, போலி ஆசிரியர்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சமீபத்தில், தர்மபுரி மாவட்டத்தில் போலி சான்றிதழ் தயாரித்து, அரசு பணியில்சேர்த்துவிடும் இடைத்தரகர் கும்பல் போலீசில் சிக்கியது. இதில், ஏராளமான ஆசிரியர்கள் போலி சான்றிதழ் தயாரித்து பணியில் சேர்ந்துள்ள விவரம் வெளியானது. 

தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலை பள்ளிகளில் கழிவறை பணியாளர்கள் நியமிக்க வழிகாட்டுதல் !


தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தில் 2016-17ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவ / மாணவியர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு


பல்வேறு முக்கிய துறைகளில் செயல்படாத உயர் அதிகாரிகளை கண்காணிக்கிறது மத்திய அரசு


பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றும் 122 துணை செயலாளர்கள் சரிவர செயல்படாமல் இருப்பது தொடர்பாக அவர்களின் பணித்திறன் குறித்த அறிக்கையை சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடம் மத்திய பணியாளர் நலத்துறை கோரியுள்ளது.


அதிமுக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளையும், அவ் வளவாக முக்கியத்துவம் இல்லாத பொறுப்புகளில் உள்ள அதிகாரி களையும் அவ்வப்போது சுழற்சி முறையில் மாற்றுவது மற்றும், பணியில் சிரத்தையாக செயல்படாத அதிகாரிகள் குறித்து மறு ஆய்வு செய்வது தொடர்பாக மத்திய அமைச்சரவைச் செய லாளர் பிரதீப் குமார் சின்ஹா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, சம்பந்தப் பட்ட அமைச்சகங்களிடம் 122 இணைச் செயலாளர்களின் பணித் திறன் குறித்த அறிக்கையை பணி யாளர் நலத்துறை கோரியுள்ளது.

இந்த 122 பேரில், 17 பேர் பாது காப்பு அமைச்சகத்திலும், 13 பேர் உயர் கல்வித் துறையிலும், 7 பேர் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையிலும், வணிகம், உணவு மற்றும் பொதுப்பங்கீடு, வருவாய், ஊரக வளர்ச்சித் துறையில் தலா 6 பேர் பணிபுரிகின்றனர்.

இதுதவிர, தேசிய புலனாய்வு வலையமைவு (நேட்கிரிட்), தேசிய பாதுகாப்பு குழு செயலகம் ஆகிய மிக முக்கிய பொறுப்பில் தலா ஒருவர் பணிபுரிகிறார்.

தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவகால மாறுபாடு, தொழிற் கொள்கை, சட்ட விவ காரம், உணவு பதப்படுத்துதல், நிதி, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட அமைச்சகங்களிலும் இவர்கள் பணிபுரிகின்றனர்.

சரியாக பணிபுரியாத அலுவலர் களை கட்டாய பணி ஓய்வில் அனுப்ப பரிந்துரை செய்யப்பட் டுள்ளது. 35 வயதுக்கு முன்பு மத்திய அரசுப்பணியில் ஏ அல்லது பி பிரிவு அலுவலராக இணைந்து 50 வயதைக் கடந்து விட்டால், பொதுநலன் கருதி அவரை கட்டாய ஓய்வு பெறச் செய்ய விதி முறை வகை செய்கிறது. அதே போல சி பிரிவு பணியாளர் 55 வய தைக் கடந்து விட்டால், அவரையும் ஓய்வு பெறச் செய்யலாம்.

கடந்த நவம்பரில் கருத்தரங்கு ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பணி செய்வதில் திருப்தி இன்மை காரணமாக மூத்த அதிகாரிகளில் 45 சதவீதம் பேர் நீக்கப்படலாம் அல்லது ஓய் வூதியம் நிறுத்த நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவர் என கூறியது குறிப்பிடத்தக்கது.

அதேஇ - மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பு - தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்தும் வகையில் வண்ண சித்திரங்களை வகுப்பறைகளில் உடனடியாக வரைய இயக்குனர் உத்தரவு - பள்ளிகளை தேர்ந்தெடுத்தல் மற்றும் செலவீன விவரம் - செயல்முறைகள்

கல்வித்துறை நடவடிக்கையால் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிக்கல்



Friday, January 22, 2016

2016-ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடம், இந்தியாவிற்கு 22 வது இடம்


உலகில் 2016-ம் ஆண்டில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடம் பிடித்து உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த உலக பொருளாதார மையம் வெளியிட்டு உள்ள தகவலில் 2016-ம் ஆண்டில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் ஜெர்மனி முதலிடம் பிடித்து உள்ளது. உலக பொருளாதார மையமானது சுமார் 60-து நாடுகளில் ஆய்வு செய்து உள்ளது. நிலைத்தன்மை, துணிச்சல், கலாச்சார செல்வாக்கு, தொழில் முனைவோர், பாரம்பரியம், வணிகம், வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார செல்வாக்கு போன்ற 24 தகுதிகளை கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு உள்ளது. வாஷிங்டன் போஸ்ட் தகவலின்படி, தகவலை சேகரிக்க 16,200 அதிகமான மக்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது என்றும் இவர்களில் 4,500 பேர் தொழில் நிறுவனங்களில் மூத்த அதிகாரிகளாக உள்ளவர்கள் என்றும் பிறர் சாதாரண மக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாரதியார் பல்கலை தேர்வு முடிவு வெளியீடு


கோவை பாரதியார் பல்கலை கழகத்தின் கீழ், அனைத்து பிரிவு முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் குருப் ‘சி’ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தில் (Aeronautical Quality Assurance) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர், கிளார்க், ஓட்டுநர் உள்ளிட்ட 80 குருப்‘சி’ பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு பள்ளி மாணவர்களுக்கு தடை


தனியார் நிறுவனம் நடத்தும் நடைபயண நிகழ்ச்சிகளில், அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை' என, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.மதுரையைச் சேர்ந்த, 'டான்' அறக்கட்டளை என்ற தனியார் நிறுவனம், 'பசுமை மற்றும் துாய்மை' என்ற தலைப்பில், பள்ளி மாணவர்களை கொண்டு, 14 மாவட்டங்களில் நடைபயணம் நடத்த, பள்ளிக்கல்வி துறையில் அனுமதி கேட்டுஉள்ளது.

சி.இ.ஓ., - டி.இ.ஓ., பணியிடங்கள் 57 காலி: பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம்


பள்ளிக் கல்வித் துறையில், 57 உயர் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பொதுத் தேர்வு மற்றும் தேர்தல் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில், 32 வருவாய் மாவட்டங்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., பணியிடங்கள் உள்ளன. இவர்கள், பள்ளி நிர்வாகம், ஆசிரியர் நியமனம் மற்றும் தேர்வு பணிகள்; மற்ற அரசு துறை சார்ந்த ஆசிரியர்களின் பணிகளை கவனிக்கின்றனர்.

அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் கட்டுப்பாட்டில், 32 மாவட்டங்களுக்கு தனியாக, 32 சி.இ.ஓ.,க்கள் உள்ளனர். இதன்படி, மொத்தமுள்ள, 64 சி.இ.ஓ., பணி யிடங்களில், 22 இடங்கள் காலியாக உள்ளன.மேலும், சி.இ.ஓ., கட்டுப்பாட்டில், கல்வி மாவட்டம் வாரியாக, 125 மாவட்ட கல்வி அதிகாரி இடங்கள் உள்ளன. இவற்றில், 35 இடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன.பல இடங்களில், சி.இ.ஓ.,க்கள் இல்லாததால், மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ., நிதியை கையாள்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் ஆயத்தப் பணிகளை கவனிக்க, கண்காணிப்பு அதிகாரிகளாக, சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ.,க்கள் வேண்டும். ஆனால், 57 காலியிடங்கள் உள்ளதால், யாரை தேர்வு பணிக்கு அமர்த்துவது என, குழப்பம் ஏற்பட்டுஉள்ளது. பட்டியல் தயார் காலியிடங்களை நிரப்ப, தகுதியான ஆசிரியர்கள் பதிவு மூப்பு பட்டியலில் தயாராக உள்ளனர். அந்த பட்டியலை ஆய்வு செய்து, சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ., காலியிடங்களை நிரப்ப வேண்டும். அதற்கு தாமதமானால், தேர்வு மற்றும் தேர்தல் பணிகளில், நிர்வாக அளவில் சிக்கல் ஏற்படும். விடைத்தாள் திருத்தம், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மையங்களை கண்காணித்தல் போன்ற பணிகளும் பாதிக்கப்படும்.

10ம் வகுப்பு திருப்ப தேர்வுகள்: பிப்ரவரி 1ல் தொடக்கம்


பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் திருப்பத் தேர்வுகளைபிப்ரவரி மாதம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் டிசம்பர் மாதத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகள் நடப்பது வழக்கம். கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழைபெய்தது.

கட்டுரை-பேச்சு போட்டிகள்: மாணவர்கள் பங்கேற்க அழைப்பு


தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க சென்னை மாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 27-ஆம் தேதியும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான போட்டிகள் 28-ஆம் தேதியும் சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளன.

நெட்' தேர்வில் யோகா பாடம் சேர்ப்பு


தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலையின், ஒன்பதாவது பட்டமளிப்பு விழா, சென்னை ராஜ்பவனில் நேற்று நடந்தது. இதில், 161 மாணவ, மாணவியருக்கு, கவர்னர் ரோசய்யா பட்டங்களை வழங்கினார்.அதில், 42 பேர் முனைவர் பட்டமும், 106 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றனர்; 14 பேர் தங்கப்பதக்கம் பெற்றனர். 

DSE ; DEO PANEL PREPARATION AS ON 01/01/2016 INSTRUCTIONS RELEASED CLICK HERE FOR LETTER



CLICK HERE FOR FORM

Thursday, January 21, 2016

9 மாவட்ட ஆட்சியர் மாறுதல்

மீண்டும் உடைந்தது ஆசிரியர் கூட்டுக்குழு!


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை, அரசிடம் முன்னெடுத்து வைக்கவும், அவர்களை ஒருங்கிணைக்கவும், ஜாக்டோ, ஜாக்டா என்ற அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது, 'டேக்டோ' என்ற புதிய அமைப்பு உருவாகிஉள்ளது.

TNSET EXAM 2016 NOTIFICATION & ONLINE APPLICATION WILL PUBLISHED MOTHER TERESA UNIVERSITY-KODAIKANAL.


Date of Examination : 21.02.2016

Last Date for Online application :
10.02.2016

Notification click Here

TNSET 2016 Online Form click Here

Print Hall Ticket click Here

FAQ

ஒரே நாளில் 1.91 லட்சம் பேருக்கு பட்டம்!


அண்ணா பல்கலைக்குட்பட்ட, 627 கல்லுாரிகளில் படித்து முடித்தவர்களுக்கான, 36வது பட்டமளிப்பு விழா, அண்ணா பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு


கேரளாவில் திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பள உயர்வு அமலுக்கு வருகிறது. கேரளாவில் சம்பள உயர்வு கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து சம்பள உயர்வு குறித்து ஆலோசிப்பதற்காக கேரள அரசு ஒரு கமிஷனை நியமித்தது. இந்த கமிஷன் சமீபத்தில் தனது அறிக்கையை முதல்வர் உம்மன்சாண்டியிடம் தாக்கல் செய்தது. பின்னர் இந்த அறிக்கையை அமைச்சரவை துணைக்கமிட்டி பரிசீலித்தது.

JAN - DA அறிவிப்பதில் என்ன குழப்பம்!!!


Expected DA Calculation will play vital role in determining Fitment Factor of 7th CPC

Expected DA from January 2016 likely to change the Fitment Factor of 7th CPC

At the end of the Sixth CPC Regime all the Central Government servants are at the verge of receiving their last installment of Dearness Allowance in Sixth Pay 
Commission. Almost the DA from January 2016 will be finalized after the release of AICPIN for the month of December 2015. The eleven months AICPIN Points released from January 2015 to November 2015 by Labour Bureau suggests that there is a possibility to get 6 to 7 percent hike in DA from January 2016. But the AICPIN for the Month of December will determine the exact rate of hike in Dearness Allowance from Jan 2016.

திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு எப்போது?


பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.

Wednesday, January 20, 2016

Get your annual statement salary..



Get your annual statement salary..

Employ  code means your CPS number

Click here

TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறியலாம்


Click Here

ஓய்வூதியத்தில் இருந்து வருமான வரி பிடித்தம்: கருவூலம்-கணக்குத் துறை தகவல்


வருமான வரி பிடித்தத்துக்கு உள்பட்ட ஓய்வூதியர்கள் தங்களது நிரந்தர கணக்கு எண்ணை ("பான்') கட்டாயமாகத் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசின் கருவூலம்-கணக்குத் துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அத்துறை சார்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிராம பள்ளிகளை தத்தெடுக்கிறது விளையாட்டு பல்கலை


விளையாட்டு பல்கலை துணைவேந்தர் மூர்த்தி, சென்னையில் நேற்று அளித்த பேட்டி: விளையாட்டு பல்கலை பட்டமளிப்பு விழா, நாளை, கவர்னர் தலைமையில், ராஜ்பவனில் நடக்கிறது. இதில், பல்கலை மற்றும்அதன், 11 உறுப்புக் கல்லுாரிகளில் படித்த, 2,308 மாணவ, மாணவியரில், 161 பேர் பட்டம் பெறுகின்றனர்.

சென்னை அறிவியல் விழா 2016 போட்டிக்கு மாணவர்களை அனுப்ப தலைமை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யலாம்.


***** அறிவிப்பு *****

***"சென்னை அறிவியல் விழா"***

#மாபெரும் அறிவியல் கண்காட்சி #

தலைப்பு- 'பேரிடர் மேலாண்மை'

நாள்- 26.02.2016 முதல் 29.02.2016 முடிய

*போட்டிகளின் தலைப்புகள்*

# உடல் நலத்திற்கு பருப்பு வகைகள்.
#பேரிடர் மேலாண்மை மற்றும் கண்டுபிடிப்புகள்.
# நீர்நிலைகளை பாதுகாத்தல்.

கட்டுரைகள், ஓவியங்கள், சுவரொட்டிகள்

வந்து சேர வேண்டிய கடைசி நாள்-  22.01.2016 *

பேச்சுப்போட்டி,வினாடி வினா

மாதிரிகளில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர்களை பதிவு செய்து அனுப்ப வேண்டிய முகவரி-

துணைத்தலைவர்,
அறிவியல் நகரம்,
பிர்லா கோளரங்க வளாகம்,
காந்தி மண்டபம் சாலை,
சென்னை 600 025.
தொ.பே எண் 044-24454054
044-24454034

ஓவியம் - 1முதல் 12 வகுப்புகள்.
கட்டுரை -

தமிழ்&ஆங்கிலம்

6முதல் 12வகுப்புகள்.& கல்லூரி
சுவரொட்டிகள்-6 முதல்12வகுப்புகள் & கல்லூரி

( வந்து சேர கடைசி தேதி.22.01.2016 வெள்ளி.)

*நிகழ்ச்சி நிரல்*

1.2.16

காலை 10.30 மணி -வினாடி வினா. தொடக்க நிலை.*

மதியம் 2.30 மணி-6முதல் 12 வகுப்புகள்.*

பேச்சுப்போட்டி -

தமிழ் 2.2.16 காலை 10.30 மணி.

6முதல்12வகுப்புகள்.

ஆங்கிலம்-3.2.16

காலை10.30 மணி.

6முதல்12 வகுப்புகள்.

மாதிரிகள் காட்சி -4.2.16 காலை10.30 மணி.    6முதல் 12 வகுப்புகள்.

கல்லூரி நிலை.

வினாடி வினா.8.2.16 காலை 10.30 மணி.

பேச்சுப்போட்டி -தமிழ்.9.2.16 காலை 10.30 மணி.
ஆங்கிலம்-10.2.16 காலை 10.30 மணி.

ஓவியங்கள் அளவு-A4
போஸ்டர் அளவு- A3

   (கல்வித்துறை அலுவலர்கள் ஆணை)

லேப்டாப்களை கொண்டு வர பிளஸ் 2 மாணவருக்கு உத்தரவு.


தமிழக அரசு சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட்


கடல் ஆய்வுக்கான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1இ என்ற செயற்கைக் கோளுடன் பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட் இன்று (புதன்கிழமை) காலை 9.31 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பீகார் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம், பெற்றோர்களுக்கு சிறை


பீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் உதவிசெய்யும்  பெற்றோர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.