'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்புவோர், தங்களுடையவிவரங்களை புதிய, 'ஆன் - லைன்' சுயவிவர பக்கத்தில் பதிவு செய்யவேண்டியது கட்டாயம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப,டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வு நடத்துகிறது. புதிய நடைமுறைதேர்வுமுறைகளில் உள்ள குறைகளை தீர்க்க, டி.என்.பி.எஸ்.சி., யில் புதியநடைமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன. அதன்படி, தேர்வுக் கட்டணசலுகை, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தேர்வருக்கான தகவல்கள்அனுப்புதல் போன்ற வற்றை எளிமைப்படுத்த, சுயவிவர பதிவுக்கான,நிரந்தர, 'ஆன் - லைன்' பதிவு முறை, நேற்றுஅறிமுகப்படுத்தப்பட்டது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர்பாலசுப்ரமணியன் கூறியதாவது:
டி.என்.பி.எஸ்.சி.,யின் போட்டித் தேர்வு எழுதுவோருக்கு, 'ஆன் - லைனில்'நிரந்தரப்பதிவு முறை - ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன் இதுவரைகட்டாயமில்லை. ஆனால், இன்று முதல் இந்தப் பதிவு கட்டாயம்ஆக்கப்படுகிறது. அதற்கான சுயவிவர பக்கம், 'ஆன் - லைனில்'வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர் எப்போது வேண்டுமானாலும், நிரந்தரபதிவில் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். தேர்வுஅறிவிக்கப்படும்போது, சுயவிவர பக்கத்தில், தங்கள் சான்றிதழ்விவரங்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.சுயவிவரபக்கத்தின் மூலம், இனி தேர்வர்களுக்கு, 'யூசர்' எனப்படும்,பயன்படுத்துனர் ஐ.டி., வழங்கப்பட்டு, 'பாஸ்வேர்ட்' எனப்படும் ரகசியதிறப்பு எண்ணும் தரப்படும்.
சட்ட நடவடிக்கை
தேர்வர் தங்களுடைய விவரங்களை இதன் மூலம் எப்போதுவேண்டுமானாலும் பார்க்க முடியும். தேர்வுக் கட்டணம் செலுத்திய பின்,அது டி.என்.பி.எஸ்.சி.,யிடம் சேர்ந்து விட்டதா, எத்தனை முறை கட்டணசலுகை பயன்படுத்தப்பட்டு உள்ளது, பதிவேற்றம் செய்து உள்ளசான்றிதழ்கள் எவை போன்ற விவரங்களை, தேர்வரும்,டி.என்.பி.எஸ்.சி.,யும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும்.
தேர்வர்கள் தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்களை பதிவுசெய்தால், சம்பந்தப்பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, தேர்வுஎழுத தடை விதிக்கப்படும். விரைந்து வெளியிட...நிரந்தரப் பதிவுசெய்தாலும், தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.
விண்ணப்பத்தில் உள்ள தகவல்களே, தேர்வு பரிசீலனைக்குஎடுக்கப்படும். நிரந்தர பதிவிலுள்ள சான்றிதழ் மற்றும் விவரங்கள்மூலம், இரண்டும் சரிபார்க்கப்படும். இந்த திட்டத்தால், வருங்காலத்தில்,சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வர்களை நேரில் வரவழைக்கதேவையில்லை. தேர்வு முடிவையும் விரைந்து வெளியிட முடியும்.தேர்வர்கள் தங்களின் சந்தேகங்களை, 1800 425 1002 என்ற கட்டணமில்லாதொலைபேசி எண்ணிலும், www.tnpscexams.net/ என்ற இணைய தளமுகவரியிலும் அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment