Pages

Monday, October 26, 2015

மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு கூட்டங்களில் பேசியநரேந்திர மோடி மத்திய அரசின் கீழ்நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்தாக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.இந்த நேர்முகத் தேர்வுக்கு பரிந்துரை செய்யவேண்டி, ஏழை, எளிய மக்கள் பல இடைத்தரகர்களை நம்பி ஏமாந்து வருவதாகவும், தங்கள் மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக விதவைத் தாய்மார்களும் பணத்துக் காக சிரமப்பட வேண்டியுள்ளது.

எனவே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தாமலேயே ஆட்களை நியமிக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்படும் எனவும் அவர் வாக்குறுதியளித்திருந்தார்.இந்நிலையில், மத்தியில் ஐக்கிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி அமைந்து, பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மாதந்தோறும் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

இன்று காலை 11 மணியளவில் ஒலிபரப்பான மன் கி பாத் நிகழ்ச்சியில்உரையாற்றிய மோடி, வரும் ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு முறை ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.இந்த நேர்முகத் தேர்வு முறை ஊழலுக்கு வழிவகுப்பதாக இருப்ப தால், இடைத்தர கர்கள் ஏழை மக்களை கொள்ளையடித்து வருகின்றனர். சிறிய பணியிடங்களுக்கு எல்லாம் இதைப்போன்ற நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டுமா? என நான் சிந்தித்துப் பார்த்தேன். ஓரிரு நிமிடங்கள் நடத்தப்படும் இதுபோன்ற நேர்முகத் தேர்வுகளில் உளவியல்நிபுணர்கள் யாரும் கலந்து கொண்டதாக நான் கேள்விப்பட்டதே கிடையாது.

எனவே, 1.1.2016 முதல் மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு முறை ரத்து செய்யப்படும் என பிரதமர் மோடி தனது இன்றைய உரையில் குறிப்பிட்டுள்ளார்.இதேபோல், மாநில அரசுகளிலும் இளநிலை பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு முறையை ரத்து செய்யுமாறு அனைத்து மாநில அரசு களுக்கும் மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார் என்பது, குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment