பள்ளியில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டத்தில், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மாணவர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து விதிமுறை மீறல், வாகனங்கள் பழுது, அதிக மாணவர்களை ஏற்றிச் செல்லுதல், பராமரிப்பு குறைவு போன்ற காரணங்களால், பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. இந்நிலையில், மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கற்றுத்தர, கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.
தேசிய குற்றவியல் அறிக்கைப்படி, ஆண்டுதோறும், 1.4 லட்சம் பேர் சாலை விபத்தில் மரணமடைகின்றனர். இதற்கு முக்கியக் காரணம், சாலை விதிமுறைகளை மீறுவது தான். எனவே, பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும், சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பள்ளியில் நடக்கும் காலை நேர பிரார்த்தனைக் கூட்டத்தில், வாரத்தில் ஒரு நாளாவது, இந்தஉறுதிமொழி எடுக்கப்பட வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது
No comments:
Post a Comment