Pages

Saturday, October 31, 2015

அறிவியில் வினாத்தாள் முறையில் மாற்றம்!

மாணவர்கள் சிந்தித்து, பதில் அளிக்கும் வகையில், அறிவியல் வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும், என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசினார். கரூர், புலியூர் செட்டிநாடு பொறியல் கல்லூரியில், தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நடந்தது
.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது:
அரசுப் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது. அறிவியல் பாடத்தில் சி.பி.எஸ்.இ., பாடத்தைப் போல மாணவர்கள் சிந்தித்து பதில் அளிக்கும் வகையில் வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. சொல்யூசன் புத்தகம் தயாராகி வருகிறது. தலைமையாசிரியர்கள் இதுபற்றி அறிவியல் ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி செயல்படுத்த வேண்டும்.
மதிப்பெண் மட்டுமே பிரதானம் அல்ல. மதிப்பெண் அதிகம் பெற வைப்பதோடு, சமுதாயத்தை சிறப்பாக உருவாக்கும் பணியிலும் ஈடுபட வேண்டும். அடுத்த தலைமுறையை உருவாக்கும் பணியின் பொறுப்பை உணர்ந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். விஷன் திட்டத்தில் தொழில்துறைக்கு அடுத்தபடியாக கல்வித்துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment