Pages

Thursday, October 1, 2015

சத்துணவு ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சு

''அமைச்சருடன் நடந்த பேச்சு, திருப்தி அளிக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறும் என, நம்புகிறோம்,'' என, சத்துணவு பணியாளர் சங்கத் தலைவர் பழனிச்சாமி கூறினார். சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து, சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி தலைமையில், தலைமை செயலகத்தில் நேற்று, பேச்சு நடந்தது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி உட்பட, மூன்று பேரும், சத்துணவு ஊழியர்கள் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமையில், மூன்று பேரும் கலந்து கொண்டனர்.

பேச்சுக்கு பின், பழனிச்சாமி கூறியதாவது: பணி வரன்முறை, காலமுறை ஊதியம்; ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினோம். முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கிறேன் என, அமைச்சர் உறுதியளித்தார். கோரிக்கைகள் நிறைவேறும் என, நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment