Pages

Monday, October 12, 2015

பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு நவ., 3 முதல் இடமாறுதல் கலந்தாய்வு

தமிழகத்தில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான கல்வித்தரத்தை மேம்படுத்தவும், கல்வி வழங்குவதை உறுதி செய்யவும், அனைவருக்கும் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட சிறப்புப் பாட ஆசிரியர்களாக, 16 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.

இவர்களுக்கு, முதன்முதலாக இந்த ஆண்டு முதல் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்த கலந்தாய்வு, நவ., 3ல் துவங்குகிறது. அன்று, ஓவிய ஆசிரியர்; 4ம் தேதி உடற்கல்வி; 5ம் தேதி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

No comments:

Post a Comment