Pages

Friday, October 30, 2015

வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களது அறிக்கையை, 'மொபைல் ஆப்ஸ்' மூலம், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை:வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களது அறிக்கையை, 'மொபைல் ஆப்ஸ்' மூலம், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அறிக்கை:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 16.94 லட்சம்; நீக்கம் செய்ய, 1.76 லட்சம்; திருத்தம் செய்ய, 2.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களில் உள்ள விவரம், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது; விண்ணப்பங்களும், 'ஸ்கேன்' செய்யப்பட்டுள்ளன.

இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து, 'செக் லிஸ்ட்' தயார் செய்யப்படுகிறது. இது, ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் வழங்கப்படும். அவர்கள், சம்பந்தப்பட்ட வாக்காளர் வீட்டுக்கு சென்று, விண்ணப்பத்தில் உள்ள விவரம் 
உண்மையா என, ஆய்வு செய்வர். தவறு இருந்தால், திருத்தம் செய்வர். ஆய்வு விவர அறிக்கையை, மொபைல் ஆப்ஸ் மூலம் பதிவேற்றம் செய்து, நேரடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்புவர்.இதனால், நேரம் மிச்சமாகும். மேலும், தங்களுடைய விண்ணப்பம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் அறியலாம். மொபைல் எண் கொடுத்த வாக்காளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.இவ்வாறு சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment