ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 23ல், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு கடந்த வாரம்வெளியானது. தேர்வு எழுதிய, 4.5 லட்சம் பேரில், 15 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
தமிழகத்தில், 500 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், தேர்வு பெற்றவர்களுக்கான பிரதானத் தேர்வு, டிச., 18ம் தேதி துவங்குகிறது.டிச., 18ல் காலையில் கட்டுரைத் தாள், பிற்பகலில் ஆங்கிலம்; டிச., 19ல் பொதுப்பாடம் ஒன்று மற்றும் இரண்டு; டிச., 21ல் பொதுப்பாடம் மூன்று மற்றும் நான்கு தாள்களுக்கு தேர்வு நடக்கிறது. டிச., 22ல் காலையில், இந்திய மொழிகளுக்கான தேர்வு எழுத வேண்டும். டிச., 23ல் தேர்வுத் தாள் 1 மற்றும் 2 ஆகிய தேர்வுகள் நடக்கின்றன.
No comments:
Post a Comment