முறைகேடுகளுக்கு இடமின்றி, ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை
நடத்த, முதன்மை
கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 923 காலியிடங்களுக்கு, மூன்று நாட்களாக, விருப்ப இடமாறுதல்
கலந்தாய்வுநடந்துள்ளது.
இந்நிலையில், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர் மற்றும்
உடற்கல்விஆசிரியர்கள், பட்டப்படிப்பு
முடித்திருந்தால், அவர்களுக்கு
பட்டதாரி ஆசிரியராக, பதவி
உயர்வு வழங்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் இந்த பதவி உயர்வுக்கு, 372 காலியிடங்கள் உள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு, பதவி உயர்வுடன் இடமாறுதல்
வழங்குவதில் எந்த முறைகேடும் இருக்கக் கூடாது என, அனைத்து சி.இ.ஓ.,க்களுக்கும், பள்ளிக் கல்வி இணை
இயக்குனர் பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
No comments:
Post a Comment