Pages

Saturday, October 31, 2015

10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்!

நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், தமிழ் பாடம் கட்டாயம் என்பதால், சிறுபாண்மை மொழி பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சியை அதிகரிக்க, குறைந்த பட்ச கற்றல் கையேடு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில், 2005-06 கல்வியாண்டு வரை, தமிழ் மொழிப்பாடம் விருப்பப்பாடமாக இருந்து வந்தது. இதனால், அவரவர் தாய்மொழி அல்லது விருப்ப மொழிகளை பாடமாக எடுத்து படிக்கும் நிலை இருந்து வந்தது. கடந்த, 2006-07 ம் கல்வியாண்டு முதல், தமிழ் மொழி பாடம் கட்டாயமாக்கப்பட்டது. அந்த ஆண்டு முதல் வகுப்பில் துவங்கி, ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக, அடுத்தடுத்த வகுப்புகளில், தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதனால், 2015-16ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும், அனைத்து மாணவர்களும், தமிழ் மொழிப்பாடத்தை கட்டாயமாக தேர்வெழுத வேண்டும்.
சிறுபாண்மை மொழிப்பள்ளிகள் மற்றும் தமிழ் தாய்மொழியல்லாத மாணவ, மாணவியரும், பொதுத்தேர்வில், தமிழ் தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் சரிந்து விடாமல் இருக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம், குறைந்தபட்ச கற்றல் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை மொழி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்தி, அம்மாணவர்களுக்கு இக்கையேடுகளை வழங்கியும், சிறப்பு பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யவும், முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment