பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.3 ஆயிரத்துக்கும் அதிகமான உபரி ஆசிரியர்கள் இருந்ததால், அவர்களைபணி நிரவல் செய்த பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
புதிதாகவும் விண்ணப்பிக்கலாம்:
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குசனிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பணியிட மாறுதல் கலந்தாய்வும், பதவி உயர்வு கலந்தாய்வும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். மனமொத்த மாறுதல் கோரும் தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு மேற்கண்ட நாள்களிலேயே இடமாறுதல் வழங்க வேண்டும். பணியிடமாறுதலுக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளன. புதிதாக விண்ணப்பித்தாலும், கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கலாம்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment