Pages

Friday, October 23, 2015

மலேசியாவுக்கு இந்திய ஆசிரியர்கள்

மலேசியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் மலேசியர்களின் திறனை அதிகரிப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மலேசிய நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் புதன்கிழமை கூறியதாவது:

நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள கிராமப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சி அளிப்பதற்காக, இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம்.

ஆங்கிலப் பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கும் இந்திய ஆசிரியர்களைக் கொண்டு பயற்சியளிக்கப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment