Pages

Monday, October 5, 2015

பொதுமக்கள் விரைவில் அறிந்து கொள்ள வாட்ஸ் அப் மூலம் தமிழக அரசு செய்திகள்.

தற்போது பல்வேறு தரப்பினரும் ஆண்ட்ராய்டு கைபேசியின் மூலம் ‘வாட்ஸ் அப்’ வாயிலாக எவ்வித காலதாமதமும், கட்டணமும் இன்றி, முழுக்க முழுக்க இலவசமாக உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக் கொள்ளுகின்றனர். 


இதனடிப்படையில் முதல் அமைச்சரின் அன்றாட அறிவிப்புகள், மக்கள் நலதிட்டங்கள், அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த செய்திகளை ‘வாட்ஸ் அப்’ வாயிலாக அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசின் செய்திகளை மேற்குறிப்பிட்ட ஏராளமான அமைப்புகள் ‘வாட்ஸ் அப்’ வாயிலாக உடனுக்குடன் செய்திகளை அறிந்து அவைகளை அவர்களுக்கு அடுத்தநிலையில் உள்ள மற்றவர்களுக்கு பரிமாறிக் கொள்ளும் போது, செய்திகள் எண்ணற்ற பொதுமக்களை விரைவாகவும், மிக எளிதாகவும் சென்றடைகிறது. மேலும் இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் செய்திதுறை விரைந்து செய்து வருகின்றது.

No comments:

Post a Comment