Pages

Monday, October 5, 2015

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு

காலாண்டு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 'பல பள்ளிகளில், இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்படவில்லை' என, குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.தமிழகத்தில், சமச்சீர்க் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையில், மூன்று பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், முதல் பருவத் தேர்வும், 10 முதல் பிளஸ் 2 வரையிலான, காலாண்டுத் தேர்வும் முடிந்துள்ளது.

செப்., 26ல் விடுமுறை அறிவித்த நிலையில், இன்று மீண்டும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. இன்று முதல், இரண்டாம் பருவப் பாடங்கள் நடத்தவுள்ள நிலையில், பல இடங்களில், அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும், இரண்டாம் பருவப் புத்தகங்கள் வழங்கவில்லை என, பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'ஒரு வாரத்திற்குள் புத்தகம் கொடுத்தால் தான், மாணவர்கள் இரண்டாம் பருவப் பாடங்களை எளிதில் படிக்க முடியும். இல்லையெனில், வரிசையாக பண்டிகைக் கால விடுமுறைகள் வருவதால், மாணவர்கள் தடுமாறும் நிலை ஏற்படும்' என்றனர்.


அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தனியார் பள்ளிகளுக்கு, 'ஆன் - லைன்' புக்கிங் முறையிலும், அரசுப் பள்ளிகளுக்கு இலவச புத்தகங்கள், பாடநுால் கழகம் மூலம் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. புத்தகம் கிடைக்காதவர்களுக்கு பள்ளி துவங்கும் முதல் நாளிலேயே வழங்கப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment