கிராம சுகாதார செவிலியர் காலி பணி யிடங்களுக்கான உத்தேச பரிந்துரை பட்டியலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தயாரிக்க உள்ளதால், தகுதியுள்ள நபர்கள் தங்களது பதிவு விவரங்களை உறுதி செய்து கொள்ளு மாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மருத்துவத் துறையில் காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் பணி யிடங்களை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நிரப்ப உள்ளது.
இந்த பணியிடங்களுக்கான பரிந்துரை பட்டியலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தயாரிக்க உள்ளது. ஆகவே, தகுதியுடைய திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பெண் பதிவுதாரர்கள் தங்கள் பதிவு விபரங்களை, www.tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்தினை பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளலாம்.
தகுதியுடைய பெண் பதிவுதாரர்கள், தங்களது பதிவட்டை, கல்விச் சான்று, சாதிச் சான்று மற்றும் குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் தொடர்பு கொண்டு, தங்கள் பதிவு விவரங்களை உறுதி செய்து கொள்ளலாம்.
கிராம சுகாதார செவிலியர் காலி பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, காலி பணியிடங்களின் எண்ணிக்கை விவரங்கள், அங்கீகரிக் கப்பட்ட கல்வி நிறுவனங் களின் விவரங்கள் ஆகியவை திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு பல கையில் ஒட்டப்பட்டுள்ளன என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment