Pages

Monday, October 5, 2015

800 பி.எட். காலி இடங்களுக்கு 14–ந்தேதி 2–வது கட்ட கலந்தாய்வு

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் உள்ள 1777 இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 28–ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.சென்னை லேடி வெலிங்டன் பி.எட். கல்லூரி வளாகத்தில் நடந்து வரும் முதல் கட்ட கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் நிறைவடைகிறது.


இன்று வரலாறு, புவியியல், வணிகவியல், பொருளாதாரம் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது.நேற்று வரை 877 இடங்கள் நிரம்பின. இன்று 77 இடங்கள் நிரம்பினால் கூட 800 இடங்கள்காலியாக கிடக்க வாய்ப்பு உள்ளது.இதையடுத்து 2–வது கட்ட கலந்தாய்வு வருகிற 14–ந்தேதி தொடங்கி 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது.


இதுகுறித்து பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பாரதி கூறியதாவது:–


இன்று மாலையுடன் முதல் கட்ட கவுன்சிலிங் முடிகிறது. நேற்று வரை 900 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள இடங்களுக்கு 2–வது கட்ட கலந்தாய்வு 14–ந்தேதி நடக்கிறது.இந்த வருடம் கலந்தாய்வுக்கு வருகை தந்த மாணவ – மாணவிகள் எண்ணிக்கை குறைவாகும்.ஒவ்வொரு நாளும் வராதவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 30 சதவீத மாணவ – மாணவிகள் விண்ணப்பித்து விட்டு கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.இந்த ஆண்டுமுதல் பி.இ., பி.டெக் படித்து முடித்தவர்களும் பி.எட். படிக்கலாம் என்று விதிமுறை உள்ளது. அதனால் 1113 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர்.அதில் 37 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்தனர். இதில் ஒருவர் மட்டுமே கல்லூரியில் சேர்ந்துள்ளார்.2–வது கட்ட கலந்தாய்வுக்கு காலியாக உள்ள இடங்களுக்கு அதிகளவு மாணவர்களை அழைக்க முடிவு செய்துள்ளோம். காலி இடங்கள் 800 இருக்கும் பட்சத்தில் 2400 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்புவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


பி.எட். படிப்பு காலம் ஒரு வருடத்தில் இருந்து 2 வருடமாக உயர்த்தப்பட்டதால் விண்ணப்பித்த பலர் படிக்க ஆர்வம் இல்லாமல் கலந்தாய்விற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் கடுமையான போட்டி ஏற்படும்.ஆனால் இந்த ஆண்டு மாணவர்கள் இடையே தயக்கமான சூழல் நிலவி வருகிறது. இதுவே காலி இடங்கள் அதிகமாக இருப்பதற்கான காரணம் என்று தெரிகிறது. 

No comments:

Post a Comment