அக்டோபர் 8-ம் தேதி நடைபெறவுள்ள ஆசிரியர் சங்கங்களின் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பங்கேற்கவில்லை என அதன் நிறுவனர் தலைவர் பி.சா.துரைமணிராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஜாக்டோ கூட்டமைப்பில் உள்ள ஒரு சில தலைவர்கள் சுயநலப்போக்குடன் செயல்பட்டு, அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசவிடாமல் புறக்கணித்து வருகின்றனர். மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையான மதுவிலக்கு பிரச்னையில் பிடிவாதம் காட்டும் அரசு ஆசிரியர்களின் எந்தவித வேண்டுகோளையும் ஏற்கும் என்ற நம்பிக்கை இல்லை.
எனவே வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதில்லை என தீர்மானித்துள்ளோம் என அந்த அறிக்கையில் பி.சா.துரைமணிராஜன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment