Pages

Tuesday, October 6, 2015

குரூப் 1 தேர்வு: விண்ணப்ப நிலவரம் இணையதளத்தில் வெளியீடு

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டனவா என்பது குறித்த விவரம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

குரூப் 1 தொகுதியில் காலியாகவுள்ள 74 பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 8-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வுக்கென 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பம்-தேர்வுக் கட்டணங்கள் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தேர்வாணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பம்-தேர்வுக்கட்டணம் செலுத்தியிருந்தும் அவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விவரம் இணையதளத்தில் இல்லாவிட்டால், பணம் செலுத்தியதற்கான ரசீதின் (Challan) நகலுடன் தேர்வாணைய மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு, வரும் 13-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment