Pages

Thursday, October 1, 2015

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ பணிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு அக்.5ம் தேதி முதல் துவக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ பணிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 5ம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியானது. இதன்படி வனம், பத்திரப்பதிவு, வணிகவரி, கருவூலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் 2 ஆயிரம் உதவியாளர், கிளார்க் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 29ல் நடந்தது. முடிவுகள் கடந்த ஆண்டு டிச. 12ல் வெளியிடப்பட்டன.



இதில் தேர்வானவர்களுக்கு முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணியும், 2ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் முடிந்தது. இவர்களுக்கான கலந்தாய்வு வரும் 5ம் தேதி துவங்க உள்ளது. இதில் தேர்வர்களின் மதிப்பெண் அடிப்படையில் துறை ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கான அறிவிப்புகள் தேர்வர்களின் இமெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அஞ்சல் மூலமும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment