Pages

Friday, October 2, 2015

உலக ரோபோடிக்ஸ் போட்டிக்கு ஆம்பூர் பள்ளி மாணவர்கள் தகுதி


உலக அளவில் நடைபெறவுள்ள ரோபோடிக்ஸ் போட்டியில் ஆம்பூர் மாணவர்கள் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு இடையேயான ரோபோட்டிக்ஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அரியானா மாநிலம், குர்கானில் என்ற பகுதியில் கடந்த 26 மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற்றன. இதில் நாடு முழுவதிலும் இருந்து 100 பள்ளிகளை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதில், சப் ஜூனியர் பிரிவில் ஆம்பூர் தக் ஷீலா பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சுஜல், காந்த், மெய்யப்பன் ஆகிய 3 பேர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் கத்தாரில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள உலக அளவிலான ரோபோடிக்ஸ் போட்டியில் உள்ள கலந்துகொள்ள இவர்கள் தகுதி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நேற்று பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சி யில் பள்ளி தாளாளர் லிக்மிசந்த் சாதனை மாணவர்களை பாராட்டினார்.

ரோபோடிக்ஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி வாகை சூட்டிய மாணவர்கள் பேசும் போது, ‘‘எரிமலைப் போன்ற பகுதி களில் மனிதர்களால் நடந்து சென்று அங்குள்ள தாதுப் பொருட்களையும், மனிதர்களுக்கு தேவையான பொருட்களையும் எடுத்து வர முடியாத சூழ்நிலையில் இது போன்ற ரோபோடிக்ஸ்களை பயன்படுத்தி கொள்ளவும், தகவல்களை சேகரித்துக் கொள்ளவும் முடியும்’’ என்றார்.

No comments:

Post a Comment