அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரும், 13ம் தேதி முதல்தனித்திறன் போட்டிகள் நடத்துமாறு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுஉள்ளது.இதுகுறித்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பொன்னையா, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பாடம் எடுக்கும் போதும், வகுப்புகள் முடிந்த பிறகும், ஒவ்வொரு மாணவரையும், ஏதாவது ஒரு பாடத்தில், துறையில் தனித்திறன் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பைக் கண்டறிய வேண்டும்.அதை செயல்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்த வேண்டும். வரும், 13ம் தேதி, கல்வி மாவட்ட அளவில்; 30ம்தேதி, வருவாய் மாவட்ட அளவில்; நவ., 12ல் மாநில அளவிலும் தனித்திறன் போட்டிகள் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment