சிங்கப்பூர் MIT Alllaince for research and Technology(SMART) நிறுவனம் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடுவோருக்கு உதவித்தொகை வழங்குகிறது. Biosystems and Micromechanics, center for environmental sensing and modeling, Future Urban Mobility, Infectious diseases என்ற நான்கு துறைகளில் ஆய்வு மேற்கொள்ள,மொத்தம் நான்கு பேருக்கு வழங்கப்படுகிறது.
ஆண்டு ஊதியமாக 85 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களும்(இந்திய மதிப்பில் 32 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்); ஆய்வு ஊக்கத்தொகையாக 40 ஆயிரம் டாலர்கள்; பயணப்படியாக 5,000 டாலர்கள் வழங்கப்படுகின்றன. வரும் 2012 டிச.,க்குள் முனைவர் பட்ட ஆய்வைப் பெறுபவர்களாக இருக்க வேண்டும். வரும் டிச., இறுதி வரை விண்ணப்பிக்கலாம். ஆய்வுத்திட்ட அறிக்கை, ஆய்வேடுகள் சமர்ப்பித்திருத்தல், ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டிருத்தல் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் பயனாளி தேர்வு செய்யப்படுவார்.
No comments:
Post a Comment