Pages

Wednesday, October 7, 2015

அங்கன்வாடி ஊழியர்கள் 400 பேருக்கு நர்ஸ் பணி

தமிழகத்தில் அங்கன்வாடிகளில், பிளஸ் 2 முடித்து பணியாற்றுவோர், பொது சுகாதாரத்துறையில், நர்ஸ்களாக பணி அமர்த்தப்படுகின்றனர். ஏற்கனவே, 200 பேர் பயிற்சி முடித்து, அரசுப்பணியில் சேர்ந்து விட்டனர்; 500 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

தற்போது, மேலும், 400 அங்கன்வாடி பணியாளர்கள், நர்ஸ் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பயிற்சி இடங்களை தேர்வு செய்யும் கலந்தாய்வுக்காக, சென்னை, எழும்பூர் பயிற்சி மையத்தில் நேற்று குவிந்தனர்.


இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில், 10 பயிற்சி மையங்கள் உள்ளன. 400 பேரும், தங்களுக்கு வசதியான பயிற்சி இடங்களை தேர்வு செய்தனர். இரண்டு ஆண்டு பயிற்சி முடித்ததும், கிராம செவிலியராக அரசுப் பணியில் இணைவர்' என்றார்.

No comments:

Post a Comment