Pages

Thursday, October 8, 2015

இயங்குமா ? தமிழகம் முழுவதும் இன்று அரசு பள்ளிகள் ....ஸ்டிரைக்'கில் குதிக்கின்றனர் 3 லட்சம் ஆசிரியர்கள்.


Dinamalar Banner Tamil NewsDinamalar Banner Tamil News
தமிழகம் முழுவதும் இன்று, அரசு பள்ளிகளைச் சேர்ந்த மூன்று லட்சம் ஆசிரியர்கள்,15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், பள்ளிகள் மூடப்படும் நிலையைத் தவிர்க்க, சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். எனினும், பள்ளிகள் முழுமையாக இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 27 சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில் இன்று, வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முறியடிக்க, பள்ளிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து இயக்க, கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பள்ளிகளுக்கு அவசர சுற்றறிக்கை நேற்று அனுப்பப்பட்டுள்ளது.

அதன் விவரம்:
*அனைத்து அரசு பள்ளிகளும் இயங்கத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்
*போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களின் விவரங்களை முன்கூட்டியே அறிந்து, போராட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்களை மற்ற பள்ளிகளுக்கு மாற்றுப் பணியாக அனுப்பி, பள்ளிகளை இயக்க வேண்டும்
*பள்ளிகள் செயல்பட போதிய ஆசிரியர்கள் இல்லாவிட்டால், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் உதவியுடன் பள்ளிகளை இயக்க வேண்டும்
*போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்று னர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்களின் விவரங்களை, மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்
*எந்த காரணத்தை கொண்டும் பள்ளிகளை மூடக் கூடாது. பள்ளிகள் செயல்படுகின்றனவா என்பது குறித்து, கல்வி அதிகாரிகளுக்கு அறிக்கை தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


ஊதியம் பறிப்பா?

போராட்டத்தில் பங்கேற்க, 'ஜாக்டோ' குழுவின் ஆசிரியர்கள், தற்செயல் விடுப்பு கடிதம் மற்றும் ஒட்டுமொத்த விடுப்பு கடிதம்

கொடுத்துள்ளதால், அவர்களுக்கு அந்த நாளின் ஊதியம் ரத்தாகாது. ஒரு சிலர், போராட்டத்தில் பங்கேற்க வசதியாக பணியை புறக்கணித்துள்ளதால், அவர்களுக்கு மட்டும், ஒருநாள் சம்பளம் ரத்து செய்யப்பட்டு, அவர்களின் விடுமுறை, பணி பதிவேட்டில் குறிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஆசிரியர்கள் கோரிக்கை என்ன?

*பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்
*ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி ஊதிய முரண்பாட்டை போக்க வேண்டும்
*தமிழை முதன்மை பாடமாக அறிவிக்க வேண்டும்*கடந்த, 2004 முதல், 2006 வரை நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பணிக் காலத்தை வரன்முறைப்படுத்த வேண்டும்
*இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு,மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக, தர ஊதியத்துடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும்
*தொடக்கப் பள்ளிகளைமூடுவதை கைவிட வேண்டும். இவை உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடக்கிறது.


நடவடிக்கை பாயுமா?

போராட்டம் நடத்தும், ஆசிரியர்கள் சங்கங்கள் மீது, நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' இன்று போராட்டத்தில் இறங்குவதாக அறிவித்து உள்ளது.போராட்டம் நடத்தும், 10 ஆசிரியர் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், போராட்டம் சட்டவிரோதமானது என அறிவிக்கவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் முன்னேற்ற அமைப்புமனு தாக்கல் செய்தது.இம்மனு, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார்.


உள்ளூர் விடுமுறைஉண்டா?

பொதுவாக, பள்ளியில் ஏதாவது நிகழ்ச்சி காரணமாக, மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால், உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். இன்று, போராட்டத்துக்கு பலர் விடுப்பு எடுத்து விட்டால், உள்ளூர் விடுமுறை அளிக்கலாமா என, கல்வி அதிகாரிகளிடம் தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். ஆனால், 'தலைமை ஆசிரியர்கள்

யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது; பள்ளியை மூடக் கூடாது' என, அதிகாரிகள்எச்சரிக்கை விடுத்துஉள்ளனர்.


சத்துணவு அமைப்பாளர்கள் மறுப்பு:

சத்துணவு அமைப்பாளர்கள் மூலம் பள்ளியை நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், 'பள்ளியின் சாவி வாங்கவோ, வகுப்புகள் நடத்தவோ மாட்டோம்' என, சத்துணவு அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சத்துணவு அமைப்பாளர்கள் சங்க மாநிலத் தலைவர் பழனிசாமி கூறியதாவது: ஆசிரியர்கள் ஒன்றிணைந்து வேலைநிறுத்தம் செய்கின்றனர். அவர்களின் கோரிக்கைக்கு நாங்களும் ஆதரவு அளிக்கிறோம். எனவே, ஆசிரியர்களிடமிருந்து எங்களை பிரிக்க வேண்டாம். கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியைத் திறந்து, மாணவர்களின் வருகையை பதிவு செய்தால் மட்டும், சத்துணவு அமைப்பாளர்கள் மதிய உணவு தருவர்.ஆனால், பள்ளியின் சாவி வாங்கவோ, வகுப்புகள் எடுக்க வோ நாங்கள் தயாராக இல்லை. சாவியை நாங்கள் வாங்கினால், பள்ளியில், ஏதாவது ஆவணம் அல்லது பொருள் காணாமல் போய்விட்டால் நாங்கள் அதற்கு பொறுப்பாவோம். எனவே, நாங்கள் பள்ளியை நடத்த மாட்டோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


3 கோரிக்கை ஏற்பு; 12க்கு கைவிரிப்பு:

ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கைகளில், மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக, அதிகாரி கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது:நிதி சார்ந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க, நிதித்துறைச் செயலருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த கோரிக்கைகளுக்கு, கூடுதல் நிதி தேவை என்பதால், தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என, நிதித்துறை தெரிவித்துள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்வது, மத்திய அரசின் முடிவை சார்ந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வையும் ரத்து செய்ய முடியாது. இதுகுறித்து, முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், பணியில் இறந்த மற்றும் ஓய்வுபெற்றோருக்கு, ஓய்வூதியம் மற்றும் பணப்பயன்கள் வழங்குவது குறித்து, அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில், உரிய உத்தரவுகள் வெளியாகும். கடந்த, 2004க்கு பின், நியமனமான ஆசிரியர்களுக்கு, தொகுப்பூதிய காலம், பணிக்காலமாக வரன்முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்; தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், ஆசிரியர் நியமனம் தொடர்பாக, தமிழுக்கு முன்னுரிமை அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற கோரிக்கைகள் பற்றி, இப்போது பேச முடியாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment