தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட தொழில்நுட்பப் பாடங்களின் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (அக். 12) வெளியிடப்படும் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடத்தேர்வுகளான தட்டச்சு (ஆங்கிலம், தமிழ்), சுருக்கெழுத்து (ஆங்கிலம், தமிழ்), கணக்கியல் ஆகிய பாடங்களின் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை இந்த இயக்ககத்தின் www.tndte.com என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment