Pages

Saturday, October 31, 2015

இன்று (31. 10.15) நிகழ்வுகள்

🌹 இன்று (31. 10.15)🌹
🌻 1931 - தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
🌻 1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
🌻 1875 - வல்லபாய் பட்டேல், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் - பிறப்பு.

திறந்தநிலை பல்கலையில் பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்க நவ.,30 கடைசி

தொலைநிலையில், பி.எட்., படிக்க விரும்புவோர், நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்!

நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், தமிழ் பாடம் கட்டாயம் என்பதால், சிறுபாண்மை மொழி பள்ளி மாணவ, மாணவியரின் தேர்ச்சியை அதிகரிக்க, குறைந்த பட்ச கற்றல் கையேடு வழங்கப்படுகிறது.

அறிவியில் வினாத்தாள் முறையில் மாற்றம்!

மாணவர்கள் சிந்தித்து, பதில் அளிக்கும் வகையில், அறிவியல் வினாத்தாள் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும், என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பேசினார். கரூர், புலியூர் செட்டிநாடு பொறியல் கல்லூரியில், தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கான மீளாய்வு கூட்டம் நடந்தது

1.20 லட்சம் ஆசிரியர்களின் டி.பி.எப்., மாநில கணக்காயருக்கு மாற்றம்

தமிழக தொடக்கக் கல்வித் துறையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில், 1.20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களின் ஊதியத்தில், மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்புநிதி கணக்குகள், மாநில தகவல் மையத்தால் பராமரிக்கப்பட்டன.ஆனால், 2003க்கு பின், புதிய ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் துவங்கப்பட்ட பின், அந்த கணக்குகளும், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்பட்டதால், குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் வருங்கால வைப்புநிதிக் கணக்குகள் அனைத்தும், மாநில கணக்காயர் அலுவலகத்துக்கு மாற்றப்பட்டு உள்ளன. இனி, வருங்கால வைப்புநிதிக் கணக்குகளை, ஏ.ஜி., அலுவலகத்தில் தெரிந்து கொள்ள, ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அறிவுறுத்தி உள்ளார்.இதற்கிடையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், இதுவரை கணக்கில் வராமல் இருந்த, 21.70 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்குகள் சரிசெய்யப்பட்டு உள்ளன. இந்த கணக்குகள், மாநில தகவல் தொகுப்பு மையத்தால் பராமரிக்கப்படுவதாக, கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


10ம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழி கட்டாயம்!

நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு வரை
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், தமிழ்
பாடம் கட்டாயம் என்பதால், சிறுபாண்மை
மொழி பள்ளி மாணவ,
மாணவியரின் தேர்ச்சியை அதிகரிக்க, குறைந்த
பட்ச கற்றல் கையேடு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், 2005-06 கல்வியாண்டு வரை,
தமிழ் மொழிப்பாடம்
விருப்பப்பாடமாக இருந்து வந்தது.
இதனால், அவரவர் தாய்மொழி
அல்லது விருப்ப மொழிகளை
பாடமாக எடுத்து படிக்கும் நிலை இருந்து
வந்தது. கடந்த, 2006-07 ம் கல்வியாண்டு
முதல், தமிழ் மொழி பாடம்
கட்டாயமாக்கப்பட்டது. அந்த ஆண்டு முதல்
வகுப்பில் துவங்கி, ஒவ்வொரு
ஆண்டும் படிப்படியாக, அடுத்தடுத்த
வகுப்புகளில், தமிழ் மொழி
கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இதனால்,
2015-16ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு

பொதுத்தேர்வு எழுதும், அனைத்து
மாணவர்களும், தமிழ்
மொழிப்பாடத்தை கட்டாயமாக
தேர்வெழுத வேண்டும்.
சிறுபாண்மை மொழிப்பள்ளிகள்
மற்றும் தமிழ் தாய்மொழியல்லாத
மாணவ, மாணவியரும்,
பொதுத்தேர்வில், தமிழ் தேர்வு எழுத
வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்
சரிந்து விடாமல் இருக்க பல்வேறு நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, ஆசிரியர் கல்வி
ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம், குறைந்தபட்ச
கற்றல் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை மொழி பள்ளி தலைமை
ஆசிரியர்கள் கூட்டத்தை நடத்தி,
அம்மாணவர்களுக்கு இக்கையேடுகளை
வழங்கியும், சிறப்பு பயிற்சியளிக்க ஏற்பாடு
செய்யவும், முதன்மைக்கல்வி
அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர்
உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி - அக்.31 சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் - தேசிய ஒருமைப்பாட்டு தினம் - உறுதிமொழி எடுக்க இயக்குனர் உத்தரவு - உறுதிமொழி இணைப்பு:--

Friday, October 30, 2015

சிபிஎஸ்இ பள்ளிகளில் பணிபுரிய உதவும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்... இன்று வெளியாகின்றன!

இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்க அனுமதிக்கப்படுவர். மேலும் மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா, என்விஎஸ், மத்திய திபெத்திய பள்ளிகளில் உள்ள பணியிடத்தில் பணியமர்த்தப்படுவர். அதுமட்டுமல்லாமல் சண்டீகர், தாத்ரா அண்ட் நாகர் ஹவேலி, டாமன் அண்ட் டையூ, அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி, டெல்லி என்சிடி பள்ளிகளிலும் பணியமர்த்தப்படுவர். இந்தத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இணையதளத்தில் இன்று வெளியாகிறது. தேர்வு பதிவெண்களை இணையதளத்தில் டைப் செய்து முடிவுகளை அறியலாம். தேர்வு முடிவுகளைக் காண http://cbse.nic.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.       

தேசிய கல்வி நாள்: பள்ளிகளுக்கு உத்தரவு

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான, நவம்பர் 11ம் தேதியை, தேசிய கல்வி நாளாக கொண்டாட, பள்ளிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 'திறன் மேம்பாடு மற்றும் அதிகாரமளித்தல்' என்ற தலைப்பில், போட்டிகள் நடத்தவும், உத்தரவிடப்பட்டுள்ளது.பெண் கல்வியின் முக்கியத்துவம், தனித்திறன் வளர்ப்பு, உடல் நலன் மற்றும் சுயதொழில் போன்ற தலைப்புகளில், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

TNPSC :GROUP I HALL - TICKET PUBLISHED-

TNPSC :GROUP I HALL - TICKET PUBLISHED-

SSA மற்றும் RMSA திட்டத்தில் பணியாற்றும் 16 ஆயிரம் ஆசிரியர்களுக்கு 'சோதனை' தீபாவளி -கவனிப்பாரா பள்ளிக் கல்வி செயலர்

தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வரும் நிலையில், கல்வித்துறையில் 16 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள், அக்டோபர் மாத சம்பளம் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) பள்ளி கல்விக்கு உட்பட்ட 6872 பட்டதாரி ஆசிரியர்கள், 1590 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 

தேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் கர்ப்பிணி அலுவலர்களுக்கு, தேர்தல் கமிஷன், சில சலுகைகளை அறிவித்துள்ளது. 

ஆசிரியர் பதவி உயர்வு முறைகேடு கூடாது

முறைகேடுகளுக்கு இடமின்றி, ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 923 காலியிடங்களுக்கு, மூன்று நாட்களாக, விருப்ப இடமாறுதல் கலந்தாய்வுநடந்துள்ளது.

வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களது அறிக்கையை, 'மொபைல் ஆப்ஸ்' மூலம், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை:வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணியில் ஈடுபடும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், தங்களது அறிக்கையை, 'மொபைல் ஆப்ஸ்' மூலம், தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வெளியிட்டுள்ள அறிக்கை:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, 16.94 லட்சம்; நீக்கம் செய்ய, 1.76 லட்சம்; திருத்தம் செய்ய, 2.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களில் உள்ள விவரம், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது; விண்ணப்பங்களும், 'ஸ்கேன்' செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியைகள் 'ஓவர் கோட்' திட்டம்

பள்ளிகளில், 'ஓவர் கோட்' அணியும் திட்டத்திற்கு ஆசிரியை களிடம் வரவேற்பில்லை; அதனால், இத்திட்டம், ஒரு பள்ளியுடன் கைவிடப்பட்டுள்ளது.மாணவர்கள் மற்றும் தவறான எண்ணமுடைய சில ஆசிரியர்களின் கேலி, கிண்டல் மற்றும் தவறான பார்வையில் இருந்து தப்பிக்க, ஆசிரியைகளுக்கு உடை கட்டுப்பாடு கொண்டு வருவது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆலோசித்தது.

குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.

'குரூப் - 4' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

2012-13 & 2014-15 புதிதாக பணி நியமணம் பெற்ற தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வட்டார அளவில் பயிற்சி வழங்குதல் - பயிற்சி நடைபெறும் இடங்கள் - செயல்முறைகள்

மனப்பாடம் செய்யாமல் பாடத்தை புரிந்து படித்து தேர்வு எழுதும் முறை: அரையாண்டு தேர்வில் அறிமுகப்படுத்தப் படுகிறது

ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளரும், அரசு தேர்வுத்துறை இயக்குனருமான தண்.வசுந்தராதேவி நேற்று கூறியதாவது:-

Thursday, October 29, 2015

முதுநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பில் (எம்.எட்.) சேர்க்கை குறைந்ததைத் தொடர்ந்து, படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்கும் நிலைக்கு கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன.

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) புதிய வழிகாட்டுதலின்படி பி.எட்., எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் நிகழாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஈடுசெய் விடுப்பு -G.O MS No 2218.Misc. dt:14.12.81

BRTE to BT CONVERSION

இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் SGT to BT promotion கொடுப்பதற்கு முன் BRTE to BT CONVERSION நடத்த கோரி தடை உத்தரவு பெற தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்ககு வந்தது.இதில் அரசு தரப்பில் 4 வாரத்திற்குள் 500 BRTE to BT conversion நடத்த அரசு ஆணை விரைவில் வெளியிடப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு 450 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு

இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 450 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக இந்த ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுதிங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்பட்டது.

தகுதி அடிப்படையில் தான் வாய்ப்புகள்: உயர்கல்வியில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு கருத்து

உயர்கல்வி துறையில் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்து தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தது.

வினா வங்கி புத்தகம் விற்பனை தாமதம்

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு வினாத்தாளில் மாற்றம் வரவுள்ளதால், வினா வங்கி விற்பனை தாமதமாகியுள்ளது.பள்ளி பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நடப்பாண்டு பாடத்துடன், முந்தைய ஐந்து ஆண்டு பொதுத் தேர்வு மற்றும் தனித்தேர்வு வினாத்தாள்களுக்கான விடைகளும் கற்றுத் தரப்படும்.

சித்தா படிப்பில் 99 கூடுதல் இடம் சித்த மருத்துவ படிப்புகளுக்கு, கூடுதலாக, 99 இடங்கள்

கிடைத்ததால், கலந்தாய்வு இரவு வரை நீடித்தது.தமிழகத்தில், ஆறு அரசு மருத்துவ கல்லுாரி கள், 21 சுயநிதி கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, 1,099இந்திய மருத்துவ படிப்பு இடங்கள் உள்ளன.இதற்கான கலந்தாய்வு, 25 முதல் நடந்து வருகிறது.

Wednesday, October 28, 2015

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு புதன்கிழமை (அக். 28) வெளியிடப்படுகிறது. இதை தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கடந்த மாதம் 29 முதல் அக்டோபர் 6 வரையில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டன. 

அனைத்து நாள்களிலும் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

பள்ளிகளில் விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய திறனாய்வுத் தேர்வு: இன்று முதல் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) புதன்கிழமை (அக். 28) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனில் ஆசிரியர்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும்-பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன்.

காலாண்டுத் தேர்வில் எஸ்எஸ்எல்சி ளஸ் 2 வகுப்புகளில் 60 சதவிகித்த்துக்கும் குறைவாகவும், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 80 சதவிகிதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசியர்கள், மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற தவறிய பாட ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேசிய திறனாய்வுத் தேர்வு:நுழைவுச் சீட்டை SCHOOL LEVEL பதிவிறக்கம் செய்ய.......

5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்டு யோசனை

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்துள்ளது.ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளும் இதே போல கோரிக்கை விடுத்து மனு செய்தன.சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது வக்கீல்கள் வாதம் நடந்தது.இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு மாநில அரசுகளுக்கு சில நிபந்தனைகளையும் நீதிபதிகள் வெளியிட்டனர்.உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கான முறையை ரத்து செய்யப்படும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.எதிர்காலத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை பயன்படுத்தாமல் தகுதி அடிப்படையில் இடம் அளிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர்.

Tuesday, October 27, 2015

வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் அரசுப் பணிகளுக்கான விவரங்கள் வெளியீடு

வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் மத்திய, மாநில அரசுப் பணிக்களுக்கான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

தற்காலிக பணியாளர்கள், தகுதிகாண் பருவத்தினர், தகுதிகாண் பருவம் முடித்தவர் ஈட்டிய விடுப்பு இருப்பு வைத்தலுக்கான விதிகள்...

CPS-Assets under Management (AUM) of National Pension System (NPS) crosses Rs. 1 lac crore-PFRDA

பள்ளிக்கல்வி - அமைசுப்பணி - இளநிலை உதவியாளர்/தட்டச்சர்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு - தகுதி பெற்றவர்கள் விவரங்கள் கோரி இயக்குனர் செயல்முறைகள்

சாதனை ஆசிரியர்களுக்கு சல்யூட்!புத்தகம் வெளியிட்டு கவுரவிக்க கல்வித்துறை திட்டம்...


Monday, October 26, 2015

மத்திய அரசின் குரூப் பி,சி,டி, பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு ரத்து: பிரதமர் மோடி அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பல்வேறு கூட்டங்களில் பேசியநரேந்திர மோடி மத்திய அரசின் கீழ்நிலை பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வை ரத்து செய்தாக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.இந்த நேர்முகத் தேர்வுக்கு பரிந்துரை செய்யவேண்டி, ஏழை, எளிய மக்கள் பல இடைத்தரகர்களை நம்பி ஏமாந்து வருவதாகவும், தங்கள் மகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக விதவைத் தாய்மார்களும் பணத்துக் காக சிரமப்பட வேண்டியுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வு :அட்டவணை வெளியீடு

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., -- ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளில், 1,129 காலியிடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 23ல், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்தது. இதன் முடிவு கடந்த வாரம்வெளியானது. தேர்வு எழுதிய, 4.5 லட்சம் பேரில், 15 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். 

தமிழ்நாட்டில் 5 இடங்களுக்கு ‘அறிவியல் எக்ஸ்பிரஸ்’வருகிறது

அறிவியல் தொழில்நுட்பம், இயற்கை வளங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது தொடர்பானவிழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இயக்கப்படும் “அறிவியல்எக்ஸ்பிரஸ்' ரயில் கடந்த 2007-ம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வி அலுவலகங்களில் 26/10/2015 முதல் 31/10/2015 வரை "விழிப்புணர்வு வாரம்" (VIGILANCE AWARENESS WEEK)கொண்டாட இயக்குநர் உத்தரவு

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கேட்ட மனுவைபரிசீலிக்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவுதிறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு கேட்டு வழங்கப்பட்ட மனுவை 6 வாரத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வெங்கடேசன் உள்பட 4 பேர் ஒரு மனுவை தாக்கல் செய்தார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

பள்ளிக்கல்வி - அனைத்து பள்ளிகள் மற்றும் பள்ளிக்கல்வி அலுவலகங்களில் 26/10/2015 முதல் 31/10/2015 வரை "விழிப்புணர்வு வாரம்" (VIGILANCE AWARENESS WEEK)கொண்டாட இயக்குநர் உத்தரவு


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தேர்வு நிலை பணி விதிகள்...SELECTION GRADE RULES...

Friday, October 23, 2015

மலேசியாவுக்கு இந்திய ஆசிரியர்கள்

மலேசியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் மலேசியர்களின் திறனை அதிகரிப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மலேசிய நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் பி. கமலநாதன் புதன்கிழமை கூறியதாவது:

நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள கிராமப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சி அளிப்பதற்காக, இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம்.

ஆங்கிலப் பாடத்தில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கும் இந்திய ஆசிரியர்களைக் கொண்டு பயற்சியளிக்கப்படும் என்றார் அவர்.

CTET September 2015 Examination OMR Sheet Image & Answer key Declared

ரூபாய் 5000/- பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்

DDE - TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY(TNPESU) 2015-2015 ACADEMIC YEAR ADMISSION NOTIFICATION - LAST DATE : 31.12.2015

ஈட்டா விடுப்பு(UN-EARNED LEAVE) மருத்துவ விடுப்பு(M.L) சொந்த காரணங்களுக்கான ஈட்டா விடுப்பு(U.E.L.ON PRIVATE AFFAIRS) விதிகள்