Pages

Wednesday, November 4, 2015

தமிழ்நாடு அரசில் 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நிரப்ப தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்:859

பணி:கால்நடை பராமரிப்பு உதவியாளர்



பணியிடம்:தமிழ்நாடு


பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:
SCA - 26
SC - 129
ST - 09
MBC - 172
BC - 227BCM - 30
GT - 266
சம்பளம்:மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1400
தகுதி:குறைந்த பட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். கால நடைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:01.07.2015 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர்களுக்கு 35 ஆகும். 10, +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயது 40, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லிம்) ஆகிய வகுப்பினருக்கு அதிக பட்ச வயது 32 ஆகும். 10, +2 தேர்வு பெற்றிருப்பின் அதிக பட்ச வயது 34, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அதிக பட்ச வயதுவரம்பு இல்லை.பொது பிரிவினருக்கு அதிக பட்சவயது 30 ஆகும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், கால்நடை பராமரிப்பு(ம) மருத்துப்பணிகள், மத்திய அலுவலகக் கட்டிடம், பகுதி-2, டி.எம்.எஸ் வளாகம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:11.11.2015விண்ணப்ப மேல் உறையின் மீது"கால்நடை பராமரிப்பு உதவியாளர் தேர்வு 2015"என பெரிய எழுத்துகளில் தவறாது குறிப்பிட்டு அடிக்கோடிட வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:ரூ.100. இதனை AXIS வங்கி செலுத்துச் சீட்டின் வாயிலாக AXIS வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தி செலுத்துச் சீட்டின் அத்தாட்சியினை (அசல்) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிட வேண்டும்.அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சென்னையில் மாற்றத் தக்க வகையில்Director, Animal Husbandry & Veterinary Services, Chenna'sஎன்ற பெயருக்கு வங்கி வரைவோலை எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், திருநங்கைகளுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை:நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் விண்ணப்பதரார்களின் சான்று சரிபாக்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

No comments:

Post a Comment