Pages

Friday, June 26, 2015

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம் புதிய கல்வி கொள்கைக் கு மத்திய அரசு விருப்பம்

உயர்கல்வியில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான, புதிய கல்விக் கொள்கை குறித்து, ஜூலை, 24ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில், நாடு முழுவதும் பல வகை பாடத்திட்டங்கள் உள்ளன. இதில், உயர்கல்வி படிப்புகள் மட்டும், மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகக் கட்டுப்பாட்டில் அமலாகின்றன. ஆனால், பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை, மாநிலங்கள் மற்றும் ஒவ்வொரு பல்கலைக் கழகங்களிலும் தனித்தனியே இருக்கின்றன.
இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிய கல்விக் கொள்கை வரைவு விதிகளை, மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

25 சதவீத CPS தொகையை திரும்ப பெறலாம் - தமிழகத்தில் இரண்டு லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.