Pages

Wednesday, September 30, 2015

"கேட்' தேர்வு: விண்ணப்பிக்க அக்டோபர் 8 கடைசி நாள்

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான "கேட்' 2016- தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் அக்.3-இல் வேலைவாய்ப்பு முகாம்

இளநிலை பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை சென்னைப் பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி நடத்தப்பட உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு பதிவுக் கட்டணம் எதுவும் கிடையாது.

BT TO PG ADDITIONAL PROMOTION PANEL AFTER 24.08.2015 RELEASED

வட்டி குறைப்பில் ரிசர்வ் வங்கி அதிரடி: வீடு, வாகனக்கடன் சுமை குறையும்

ரிசர்வ் வங்கி நேற்று, குறுகிய காலக்கடனுக்கான வங்கி வட்டி விகிதத்தில், அதிரடியாக, 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகனங்கள் வாங்குவோருக்கான கடன் சுமை, கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

'நெட்' தேர்வு முடிவுகள் வெளியீடு

கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள் மாதந்தோறும், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறவும், தேசிய அளவிலான நெட் தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். 

விடுமுறையில் வகுப்பு: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த, 26ம் தேதி முதல், விடுமுறை விடப்பட்டு உள்ளது. வரும் 3ம் தேதி மற்றும், 5ம் தேதி என, இரண்டு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் - சட்டசபையில் அமைச்சர் பதில்

சத்துணவு ஊழியர்கள் மீது, தடியடி நடத்தவில்லை' என, சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி கூறினார். இதுதொடர்பாக, சட்டசபையில் அமைச்சர் வளர்மதி கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணியாக வந்த சத்துணவு அமைப்பாளர்கள், முதல்வரை சந்திக்க வேண்டும் என்றனர். 

பணியின் போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கான முன்பணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு

பணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

தமிழகத்தை டிஜிட்டல்மயமாக்க உதவும் மைக்ரோசாப்ட் மேகக்கணினி சேவை (Cloud Computing Service): முதல்வர்ஜெயலலிதா தொடங்கிவைத்தார்

சென்னையில் மைக்ரோசாப்ட் நிறு வனம் அமைத்துள்ள தரவு மையத் தில் இருந்து வழங்கப்படும் மேகக் கணினி சேவையை முதல்வர் ஜெய லலிதா நேற்று தொடங்கி வைத்தார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில் எண்கள், புறப்படும் நேரத்தில் மாற்றம்: ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு!

இந்த ஆண்டுக்கான (2015-2016) ரயில்வே கால அட்டவணையை தெற்கு ரயில்வே நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது. இந்தப் புதிய ரயில்வே கால அட்டவணை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதில் ரயில்களின் எண்கள், ரயில்கள் புறப்படும் நேரம் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன. புதிய இடங்களில் இருந்து புறப்படும் ரயில்களின் விவரமும் இடம் பெற்றுள்ளது. ஆனால், அதில் புதிய ரயில்கள், வேகம் அதிகரிக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை ஆகியவை அறிவிக்கப்படவில்லை.

பிச்சை எடுத்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு - ரஷ்யா சென்றடைந்தார்

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிச்சை எடுத்த ஒரு மாணவிக்கு, மருத்துவக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் ரஷ்யா சென்றடைந்தார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

Tuesday, September 29, 2015

மகளிர் சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைப்பேசிகள்

சுய உதவிக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிக்கும் பயிற்றுநர்களுக்கு கணினிமயமாக்கப்பட்ட கைப்பேசிகள் வழங்கும் திட்டமான, "அம்மா கைப்பேசி திட்டம்' தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

அரசு நிர்வாக இயந்திரத்தின் முதுகெலும்பாக கருதப்படுவது வருவாய்த்துறை ஆகும். சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை உட்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தாலுகா அலுவலகங்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றன.

சி.பி.எஸ்.இ., தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை, 2016 மார்ச்சில், தனித்தேர்வராக எழுத உள்ளவர்கள், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில், தங்களின் விவரங்களை, அக்., 15க்குள் பதிவு செய்ய வேண்டும்.

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்த உத்தரவு

வேளாண் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு, பொது கலந்தாய்வு நடத்தி, இடமாறுதல் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், வேளாண் தொழிற்கல்வி மற்றும் கணினி பயிற்றுனர் பணியிடங்களில், 2,200 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இடமாறுதல்இவர்களில், வேளாண் ஆசிரியர்கள், 14 ஆண்டுகளாகவும், கணினி ஆசிரியர்கள், எட்டு ஆண்டுகளாகவும், எந்தவித இடமாறுதலும் இல்லாமல், ஒரே இடத்திலே பணிபுரிகின்றனர். 

அக்கறை இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம்

உலகிலேயே இருதய நோய்களால் தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இருதய நோய்கள் குறித்தும், இருதயத்தை பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சர்வதேச இருதய கூட்டமைப்பு சார்பில் செப்., 29ல் உலக இருதய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தொடங்கியது பி.எட். கலந்தாய்வு: முதல் நாளில் 78 பேருக்கு சேர்க்கைக் கடிதம்

ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 78 பேர் சேர்க்கை கடிதங்களைப் பெற்றனர்.

வங்கி எழுத்தர் தேர்வு: சென்னையில் 3 நாள் இலவசப் பயிற்சி வகுப்பு

வங்கி எழுத்தர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சென்னையில் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் மூன்று நாள்கள் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்ட பணியாளர் நலச் சங்கம், "எம்பவர்' சமூக நீதி அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

பி.எட்., கல்வி கட்டணம் உயர்கிறது

தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள 7 அரசு பிஎட் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் பிஎட் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில்  உள்ள 1,777 இடங்களுக்கு 8,005 விண்ணப்பங்கள் பெறப்பட்டன

டெங்கு காய்ச்சலாக இருக்க வாய்ப்பு மாணவர்களிடம் காய்ச்சல் இருந்தால் ஆஸ்பத்திரிக்கு தெரியப்படுத்த வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனரகம் கடிதம்

மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கடுமையான காய்ச்சல் இருந்தால் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் எனவே உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிக் கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது.

Monday, September 28, 2015

பத்தாம் வகுப்பு தனித்தேர்வுறு இன்று துவக்கம்.

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு,இன்று (28ம் தேதி) துவங்கி, அக்., 6 வரை நடைபெறுகிறது.   தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வை, 240 பேர் எழுத உள்ளனர். பிளஸ் 2 தனித்தேர்வு, இன்று துவங்கி அக்., 10வரை, நடைபெறும்.

மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்கள் கட்டாயம்: பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. உத்தரவு...

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி விவரங்களையும் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. அமைப்பு அண்மையில் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: 

ஆசிரியர்களின்றி சுயமாக கல்வி கற்கும் இணையதளம் நவம்பரில் செயல்படத் தொடங்கும்: யுஜிசி துணைத்தலைவர் தேவராஜ் தகவல்

ஆசிரியர்களின்றி சுயமாக கல்வி கற்கும் வகையிலான புதிய இணையதள சேவை நவம்பரிலிருந்து செயல்படத் தொடங்கும் என யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் தெரிவித்தார்.

தமிழைக் கணினியில் மொழிபெயர்க்கும் மென்பொருளை உருவாக்கப் பயன்படும் ஆய்வு: முதல்முறையாக முனைவர் பட்டம் பெற்ற சென்னை மாணவி

 தமிழைக் கணினியில் மொழி பெயர்க்கும் மென்பொருளை உரு வாக்கப் பயன்படும் ஆய்வுக் கட்டுரைக்கு முதன்முறையாக முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் சென்னை மாணவி.

மொழிபெயர்ப்புக்கு 100 ஆண்டு வரலாறு உண்டு. இந்தியாவில் இந்தி உட்பட பல மொழிகளின் மொழிபெயர்ப்புக்குக் கணினியை ஏறக்குறைய முழுமையாகப் பயன்படுத்திவிட்டனர் என்றே சொல்லலாம்.
அதாவது பிற மொழியில் நடைமுறையில் எழுதப் படும் ஒரு வாக்கியத்தைக் கணினியில் பதிவு செய்தால், அது அப்ப டியே ஆங்கிலத்தில் மொழி பெயர்க் கப்படுகிறது. ஆனால், தமிழ் மொழி யில், நாம் எழுதுகிற தமிழை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் நிலை இப்போது இல்லை.

இணையம் வேகமாக இயங்க‌...

ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தில் உலா வரும் போது இன்னும் கொஞ்சம் கூடுதல் வேகம் வேண்டும் என்று தோன்றுகிறதா? உங்கள் இணைய சேவை நிறுவனத்துடன் மல்லு கட்டுவது தவிர, இணைய வேகத்தை அதிகரிக்கச்செய்யும் எளிய வழிகளை லைப்ஹேக்கர் தளம் பட்டியலிட்டுள்ளது;

சமையல் எரிவாயு உருளைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார்அளிக்க புதிய வசதி

சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியர்கள் கட்டாயப்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலித்தால், செல்லிடப்பேசி எண் மூலம் புகார் அளிக்குமாறு, முகவர்கள் தங்கள் வாடிக்கையாளருக்கு குறுந்தகவல்களை அனுப்பி வருகின்றனர்.கட்டாய வசூல்: பெரும்பாலான இடங்களில் விநியோக ஊழியர்கள், ஒரு எரிவாயு உருளைக்கு ரூ.25 முதல் ரூ.35 வரை ரசீது தொகையை விட கூடுதலாகப் பணம் வசூலிக்கின்றனர்.

கட்டாய ஓய்வு கொடுக்கும் புதிய சட்டம் அமல்: 50 வயதுக்கு மேல் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் கலக்கம்

மத்திய அரசில் 18 பெரிய துறைகள் உள்ளன. ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, மனித வள மேம்பாடு, எல்.ஐ.சி., தபால், பி.எஸ்.என்.எல்., கப்பல், வருமான வரி, சுங்கவரி உள்ள பல துறைகளில் ரெயில்வே மிகப் பெரிய துறையாகும். இந்த துறையில் மட்டும் 13 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.அனைத்து மத்திய அரசு துறைகளிலும் மொத்தம் 34 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 

More than 100 Keyboard Shortcuts

Keyboard Shorcuts (Microsoft Windows)
1. CTRL+C (Copy)

2. CTRL+X (Cut)

3. CTRL+V (Paste)

4. CTRL+Z (Undo)

5. DELETE (Delete)

6. SHIFT+DELETE (Delete the selected item permanently without placing the item in the Recycle Bin)

7. CTRL while dragging an item (Copy the selected item)

Saturday, September 26, 2015

ஆசிரியர்களே உண்மையான கல்வி நிபுணர்கள்: மணீஷ் சிசோடியா

"ஆசிரியர்களே, உண்மையான கல்வியியல் நிபுணர்கள்' என்று தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார். தில்லியிலுள்ள தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுடன், துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார்.

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விசாரணை

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மீது அளிக்கப்பட்டிருந்த புகார் மனுக்கள் மீது வெள்ளிக்கிழமை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் விசாரணை நடத்தினர். தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசு மீது ஆசிரியர் கலந்தாய்வு, வழிகாட்டி விற்பனை உள்ளிட்டவை குறித்த புகார் மனுக்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுவின் மீதான நடவடிக்கை ஆகியவை குறித்து பள்ளிக் கல்வித் துறைக்கு பல்வேறு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

பள்ளிக் கல்வித் துறை உத்தரவின் பேரில் இந்த புகார்கள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், முதன்மைக் கல்வி அலுவலர் எம்.வாசுவிடம் பள்ளிக் கல்வித்துறை நாட்டு நலப் பணித் திட்ட இணை இயக்குநர் பொன்னையா விசாரணை நடத்தி, ஆவணங்களை ஆய்வு செய்தார்.
 புகார் மனு அளித்தவர்களை தேனி பி.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வரவழைத்து, அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குநர் நாகராஜமுருகன் விசாரணை நடத்தினர்.

செப்.28 முதல் அக்.6 வரை பத்தாம் வகுப்பு தனித் தேர்வு

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இந்தத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 

பத்தாம் வகுப்பு தனித் தேர்வு-தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய

மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும் - அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

2015-16-ஆம் ஆண்டில் 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைகள் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.விவாதத்துக்குப் பிறகு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:

பள்ளிக்கல்வி-கணினி பயிற்றுநர்களுக்கான பொது மாறுதலில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்...

Friday, September 25, 2015

பள்ளிக்கல்வி - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை "இளைஞர் எழுச்சி நாள்"- ஆக கொண்டாட உத்தரவு


6%அகவிலைப்படி உயர்வு ஆணை வெளியிட்டது மத்திய அரசு


EMIS இணையதளம் தற்போது செயல்படுகிறது...


தளம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததால் சிறிது காலம் செயல்படாமல் இருந்த EMIS இணையதளம் தற்போது செயல்பட்டு வருகிறது,எனவே தலைமையாசிரியர்கள் I-Vlll வகுப்பு வரை உள்ள மாணவர்கள் விபரங்களை Student என்பதை Click செய்து உங்களது மாவட்டம்.,ஒன்றியம்.,பள்ளி,வகுப்பு என்பதை தேர்வு செய்வதன் மூலமாக அறியலாம்.I வகுப்பு மாணவர்களின் விபரங்களயும் ஏற்றலாம்.


Click here EMIS site link...
��������������������������������

https://emis.tnschools.gov.in/accounts/login/?_e_pi_=7%2CPAGE_ID10%2C6017525494

பள்ளிக்கல்வி - பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை "இளைஞர் எழுச்சி நாள்"- ஆக கொண்டாட உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

8642 BT, PG PAY CONTINUANCE ORDER

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் மூலம் 5 உறுப்பு

கல்வியியல் கல்லூரிகள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும் - தமிழக முதல்வர் ஜெயலலிதா
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாசித்த உரையில்,

அரசு தொழில்நுட்பத் தேர்வுகள் தாமதப்படுத்தும் கல்வித்துறை

அரசு தொழில்நுட்பத் தேர்வை நடத்தாமல், கல்வித்துறை தாமதப்படுத்தி வருகிறது.கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் ஓவியத்தில் 10 தேர்வுகள், தையலில் 4, நடனம், இசையில் தலா 3 தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தோர் எழுதலாம்.2012 வரை டிசம்பரில் தேர்வுகள் நடத்தப்பட்டன. 

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம்

:ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு!

மத்திய அரசின் கலை விழாவில், தமிழக பாரம்பரிய கலைகளான, கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்த, அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.கலை விழாமத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், ஆண்டுதோறும், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும், தேசிய கலை விழா, 'கலா உத்சவ்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. 

சமச்சீர் கல்வி பாட புத்தகம் வாங்க ஆர்வமில்லாத தனியார் பள்ளிகள்

சமச்சீர் கல்வியை பின்பற்றும், 35 சதவீத தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தமிழக அரசின், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

'இவர் பழைய வாக்காளர்'காட்டிக்கொடுக்கும் 'சாப்ட்வேர்'

"ஒரு வாக்காளர் இரண்டு இடங்களில் இருந்தால் வாக்காளரின் போட்டோவை அடையாளம் காட்டும் புதிய 'சாப்ட்வேரை' தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, திருத்தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் சேர்ப்பு பணிகள் நடக்கிறது.

பி.எட்., எம்.எட். துணைத் தேர்வு: பல்கலைக்கழகம் அறிவிப்பு

ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தபால் துறையில் 143 பணியிடங்கள்

 இந்திய அஞ்சல் துறை சார்பில், தபால்காரர் மற்றும் மெயில் கார்டு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு அஞ்சல் வட்டத்திலுள்ள, அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பு கோட்டங்களிலுள்ள, 142 தபால்காரர் மற்றும் ஒரு மெயில் கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொது பிரிவினருக்கான வயது வரம்பு, 18 - 27; பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிரிவினருக்கு, அரசு ஆணைகளின்படி, வயது தளர்வு வழங்கப்படும்.

பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை டிச.31க்கு முன் வழங்க உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை இலவசமாக மின்னணு முறையில் டிச.,31 முன் வழங்க வருவாய் நிர்வாக ஆணையர் கிரிஜா வைத்தியநாதன், கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

அரசு உதவிபெறும் பள்ளிகளில், வேலையே பார்க்காமல், சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின் பட்டியலை எடுக்க, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.  தமிழகத்தில், 10 ஆயிரம் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசு சம்பளத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தேவைக்கு அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; அவர்களுக்கு, அரசு செலவில் வழங்கப்படும் ஊதியம் வீணாகிறது என, புகார்கள் எழுந்துள்ளன.

Fake news spreading about DA Merger and Retiring age

இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு !!!

சமச்சீர் கல்வியை பின்பற்றும், 35 சதவீத தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தமிழக அரசின், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வு எவ்வாறு வழங்கப்பட வேண்டும்? -RTI பதில்


Thursday, September 24, 2015

12 Std quarterly key answer 2015-2016

10 QUARTERLY SCIENCE KEY ANSWERS 2015 -16 AVL

7979 SSA BT Post Continuance Orders

4393+1764 Lab Assistant, Junior Assistant Post Continuance Orders

2408+888 RMSA Post Continuance Orders

பள்ளிக்கல்வித்துறை - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகள்!!!



*புதியதாக 39 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 5 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி உத்தரவு. இப்பள்ளிகளுக்கு புதியதாக 78 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிப்பு

*தொடக்கக் கல்வி துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர்களின் வைப்பு நிதிக் கணக்குகளை மா நில கணக்காயரின் அவர்களின் பராமரிப்பில் கொன்டுவரப்படும். இதனால் சுமார் 1 லட்சத்து 19 
ஆயிரம் ஆசிரியர்கள் பயனடைவார்கள்.


*2010-11 மற்றும் 2011-12 ஆம் கல்வியாண்டில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட 1054 பள்ளிகளுக்கு பள்ளி கட்டடங்கள் கட்ட ரூ.1,263 கோடியே 53 லட்சம் ரூபாய் 
ஓதுக்கீடு செய்து உத்தரவு




*பெரம்பலூர் மற்றும் கோவை மாவட்டங்களில் புதியதாக ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உருவாக்கம்.



*திருச்சியில் புதிய ஆசிரியர் இல்லம் கட்டவும், சென்னை சைதாபேட்டையில் உள்ள ஆசிரியர் இல்லத்தை புதுபிக்கவும் உத்தரவு

ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள்: டி.என்.பி.எஸ்.சி. தகவல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டதாக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது. 
 தேர்வாணையத்தின் அறிக்கை (2009 முதல் 2014 வரை), சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு கட்டடங்கள் கட்ட ரூ.1,263 கோடி: முதல்வர் அறிவிப்பு

உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 1,054 பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட ரூ.1,263 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அரசு ஊழியர்களுககு திமுக பாதுகாப்பு அரணாக திகழும்: மு.க. ஸ்டாலின் பேச்சு

ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு அரணாக திமுக திகழும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.

தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு வழிக் கல்வி தொடர வேண்டும்: ஆந்திர அரசு

தமிழகப் பள்ளிகளில் தெலுங்கு வழிக் கல்வியும், தெலுங்கை இரண்டாவது மொழியாக தேர்வு செய்யும் வாய்ப்பும் தொடர வேண்டும் என்று தமிழக அரசிடம் ஆந்திர அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

தேசிய திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 இந்த தேர்வு நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.
 இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் இந்த விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 
 இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏ.டி.எம். அட்டை, கல்விக் கடன் குறித்து அதிகப் புகார்கள்:

வாடிக்கையாளர்களின் பிரச்னைகளுக்கு வங்கிகள் சுமுகத் தீர்வு காண வலியுறுத்தல்
வங்கிச் சேவை குறித்து வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு சுமூகத் தீர்வு காண தொடர்புடைய வங்கிகள் முயற்சிக்க வேண்டும் என்று சென்னையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் குறைதீர் ஆணையத்தின் பொது மேலாளர் செல்வராஜ் ராஜா வலியுறுத்தினார். 

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்: அமைச்சர் பழனியப்பன்

சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாக, தெரிவித்தார்.

புதிய மாவட்டக் கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்பு


மதுரை, உசிலம்பட்டி மற்றும் வேலூர் கல்வி மாவட்டங்களின் புதிய மாவட்டக் கல்வி அலுவலர்கள் புதன்கிழமை பொறுப்பேற்றனர்.
 நத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றிய பெ.சாத்தாவு மதுரை மாவட்டக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ளார். தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிய

வாட்ஸ்-அப்களுக்குக் கொண்டு வரப்பட இருந்த புதிய வரைவுக் கொள்கை ரத்து: பின்னணி என்ன?

பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக வாட்ஸ்-அப்களுக்கு மத்திய அரசு கொண்டு வர இருந்த புதிய கெடுபிடிகளுக்கான வரைவு தேசிய கொள்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

"அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு' - அமைச்சர் கே.சி.வீரமணி

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
 அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளையே அனைவரும் நாடிச் செல்வதாகவும் கூறி, திமுக உறுப்பினர் எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆறுமுகம், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் அஸ்லாம் பாஷா ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான கையேட்டை இலவசமாக வழங்க கோரிக்கை

அரசு பொதுத் தேர்வு எழுதும் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான கையேட்டை இலவசமாக வழங்கவேண்டும் என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தம்: செப். 30, அக் 7-ல் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள செப். 30 மற்றும் அக். 7 ஆகிய இரு தினங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடைபெற உள்ளன என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

7வது சம்பள கமிஷன் அறிக்கை விரைவில் தயார்!

புதுடில்லி:மத்திய அரசால் நியமிக்கப்பட்ட, ஏழாவது சம்பள கமிஷன், விரைவில் தன் அறிக்கையை தாக்கல் செய்ய விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 55 லட்சம் ஓய்வூதியர்கள், பயனடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

விடுமுறை நாளிலும் கட்டாய பணிபள்ளிக்கல்வி ஊழியர்கள் அவதி

அரசு விடுமுறை நாட்களிலும், அலுவலகம் வரச் சொல்லி கட்டாயப்படுத்துவதால், ஊழியர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக, பள்ளிக் கல்வி அலுவலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இயற்கை முறையில் கிருமிநாசினி: அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

கோவை : தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க, இயற்கை கிருமிநாசினி தயாரித்து, அரசு பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.ஆமதாபாத், 'டிசைன் பார் சேஞ்ச்' அமைப்பு சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கான, 'புராஜக்ட் எக்ஸ்போ' போட்டி நடத்தப்படும். இந்தாண்டு தேசிய அளவில் நடக்கும் இப்போட்டியில், கோவை ஆறுமுகக்கவுண்டனுார் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக, பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள், நந்தகுமார், தனலட்சுமி, தர்ஷினி, ஸ்ரீமதி, அருண் ஆகியோர், இயற்கை கிருமிநாசினியை கண்டுபிடித்துள்ளனர்.

வேலைக்கு செல்லும் பெண்கள் தான் வேலையில்லா பிரச்னைக்கு காரணமாம்

ராய்ப்பூர்: 'வேலையில்லா திண்டாட்டத்துக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் தான் காரணம்' என, சத்தீஸ்கர் மாநில, பள்ளி கல்வி பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டதற்கு, பெண்கள் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Wednesday, September 23, 2015

தரம் உயர்ந்தும் வளர்ச்சி பெறாத பள்ளிகள் கல்வித்துறை கவனிக்குமா?

உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், அதற்கான கூடுதல்வகுப்பறை, சுற்றுச்சுவர் போன்ற வசதிகள் செய்து தருவதில், தாமதம் நிலவுவதாக,குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கை, கட்டமைப்பு வசதி, ஆசிரியர் எண்ணிக்கை, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, அதற்கேற்ப தரம் உயர்த்தப்படுகிறது. 

தகுதி தேர்வில் தேர்ச்சி இல்லை: வக்கீல் தொழில் செய்ய 2495 பேருக்கு தடை - பார் கவுன்சில் உத்தரவு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-2010-ம் ஆண்டுக்கு பிறகு சட்டம் படித்து வக்கீலாக பதிவு செய்துள்ளவர்கள், வக்கீலாக பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து 2 ஆண்டுக்குள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, வக்கீலாக பணி செய்யமுடியும். ஆனால், வக்கீலாக பதிவு செய்துள்ள 2,495 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. எனவே, இவர்கள் தற்காலிக வக்கீலாக பணியாற்ற தடை விதிக்கப்படுகிறது.

ஐகோர்ட்டு நிர்வாக பணிகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக வக்கீல்கள் மணிகண்டன் வதன் செட்டியார், ஆர்.மதன்குமார் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் ஐகோர்ட்டு வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த இரு வக்கீல்கள் மீது வக்கீல் சட்டம்பிரிவு 35-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதன்படி, இந்த 2 வக்கீல்கள் மீதும் எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை முடியும் வரை,இவர்கள் இருவரும் வக்கீல் தொழில் செய்ய தடை விதிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

DTEd முடித்து, பட்டப் படிப்பு படிப்பில் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர் மட்டுமே IGNOU BEd

மதுரை மண்டலத்தில், 'இக்னோ' நடத்திய பி.எட்., மற்றும் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில், 90 சதவீதம் பேர் பங்கேற்றனர்.15 மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான நுழைவுத் தேர்வு, மதுரை உட்பட ஒன்பது மாவட்ட மையங்களில் நேற்று நடந்தன. 

90 சதவீதம் பேர் பங்கேற்றனர். தேர்வு பணிகளை, மண்டல இயக்குனர் மோகனன் தலைமையிலான பேராசிரியர் குழுக்கள் கண்காணித்தன. மோகனன் கூறுகையில், "இந்தாண்டு முதல் புதிய நடைமுறையாக பி.எட்., படிப்பில் சேர, ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு முடித்து, பட்டப் படிப்பு படிப்பில் 50 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்றவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஏற்கெனவே இருந்த 'பட்டப் படிப்புடன் 2 ஆண்டுகள் ஆசிரிய ராக பணி அனுபவம் இருக்க வேண்டும்' என்பது எடுத்துக்கொள்ளப்படவில்லை," என்றார்

1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும் : ‘கணித உபகரண பயிற்சி பெட்டி’ அரசு உதவி பள்ளிகளுக்கு நிராகரிப்பு

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கப்படும், “கணித உபகரண பயிற்சி பெட்டி” அரசு பள்ளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு, உதவி பெறும் பள்ளிகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால், பயிற்சி பெற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகளும், 15 ஆயிரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளும் உள்ளன. அதேபோல, 7,307 அரசு நடுநிலை பள்ளிகளும், 2,400 அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

கடும் எதிர்ப்பு எதிரொலி: வாட்ஸ்அப் மீதான கண்காணிப்பு திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது

நவீனகால தந்தி சேவையாக மாறிப்போன வாட்ஸ்அப் தகவல்களை கண்காணிக்க மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த வரைவு திட்டம் பயன்பாட்டாளர்களின் கடும் எதிர்ப்பையடுத்து உடனடியாக கைவிடப்பட்டது. வாட்ஸ்ஆப் மூலம் மொபைல் வழியாக தகவல்கள், வீடியோ உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கும் வசதி உள்ளதால், நல்லதோ, கெட்டதோ.., அவை நொடிப் பொழுதில் பலருக்கும் பரவி விடுகிறது.

நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 30 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு தொழிற் பயிற்சி

‛‛நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் 30 ஆயிரம் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்படும்’’ என தொழிற் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென்மண்டலஇயக்குனர் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியீடு

ஆபிஸ்-2016 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்யா நாதல்லா தெவித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2016-ல் விண்டோஸ், வேர்ட், பவர்பாயிண்ட், எக்செல் மற்றும் அவுட்லுக் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது.