Pages

Tuesday, November 17, 2015

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்: உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு


பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் கடந்த 2001–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந்தேதி மகா சம்ப்ரோஷ்ணம் நடந்தது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்து கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி என்பதால் தமிழக அரசு இக்கோவில் திருப்பணிகளை தொடங்க திட்டமிட்டு அதற்கான கால்கோள்விழா

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5–ந் தேதி நடந்தது.

ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட பணிகள், நண்கொடையாளர்கள் ஒத்து ழைப்போடு ரூ.25 கோடிக்கும் மேலான மதிப்பில் இரவு பகலாக நடந்தது. இதில் பிர தான சன்னதிகள் தவிர மற்ற சன்னதி திருப்பணிகள் முதலில் நிறைவுபெற்றது. இதை தொடர்ந்து திருப்பணிகள் நிறைவடைந்த 11 கோபுரங்கள் மற்றும் 43 உப சன்னதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் 9–ந்தேதி மகா சம்ப்ரோஷ்ணம் நடந்தது.
பிரதான சன்னதிகளான ரங்கநாதர், ரங்கநாயகித் தாயார், சக்கரத்தாழ்வார், பெரி யகருடன் மற்றும் ராமானுஜர் சன்னதிகளுக்கான திருப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இந்த சன்னதிகளுக்கும் மீதமுள்ள 10 கோபுரங்களுக்கும் மகா சம்ப்ரோஷ்ணம் நாளை (18–ந் தேதி) நடைபெறுகிறது.
இதற்காக 9 ஹோம குண்டங்கள், 5 மேடைகளுடன் கொண்ட யாகசாலை கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த யாகசாலையில் 8 கால யாகசாலை பூஜைகள் கடந்த 14–ந்தேதி மாலை பாஞ்சராத்ர ஆகம முறைப்படி தொடங்கியது. அன்று இரவு முதல்கால யாக சாலையும், 15–ந்தேதி காவிரி அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீர் சேகரித்து யானை மீது வைத்து மேளதாளத்துடன் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு 2,3–ம் கால யாக சாலை பூஜையும் நடந்தது. 
நேற்று காலை 4–ம் கால யாக சாலை பூஜையும், கும்பாபிஷேகம் நடைபெற உள்ள கோபுரங்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், இரவு 5–ம் கால யாக சாலையும், இன்று காலை 6–ம் யாக சாலையும் நடந்தது. மாலை ரங்கநாயகித்தாயார் சன்னதி விமானத்திற்கு ஸ்நாபன திருமஞ்சனமும், இரவு 7–ம் கால யாகசாலை நடக்கிறது.
நாளை அதிகாலை 4 மணிக்கு 8–ம் கால யாக சாலை தொடங்கி 7 மணியளவில் மகா பூர்ணாஹூதியும், 7.15 மணியளவில் யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு 9 மணிக்கு மேல் ரங்கநாதர் சன்னதி தங்கவிமானம், ரங்கநாயகி தாயார், சக்கரத் தாழ்வார், பெரிய கருடன் விமானங்களுக்கும், ராமா னுஜர் சன்னதிக்கும், ராஜகோ புரம் தெற்குவாசல் நான்முகன் (ரங்கா ரங்கா) கோபுரம், கார்த்திகை கோபுரம், ஆரியப்படாள்வாசல் கோபுரம், வடக்கு வாசல் கோபுரம் ஆகியவற்றிற்கும் மகா சம்ப்ரோஷ்ணம் நடைபெறுகிறது.
யாகசாலை நிகழ்ச்சிகளை யொட்டி உற்சவர் நம்பெருமாள் கடந்த 15–ந்தேதி முதல் தினமும் காலை முதல் இரவு வரை யாகசாலையில் எழுந்தருளியிருக்கிறார். சம்ப்ரோஷ்ணம் நிறைவடைந்த பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் பெரிய சன்னதி, தாயார் சன்னதி மற்றும் சக்கரத் தாழ்வார் சன்னதிகளில் பக் தர்கள் தரிசனத்திற்கு அனு மதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்ப்ரோஷ்ணத்தை பக்தர்கள் காண வசதியாக ரங்க விலாஸ் மண்டபம், சக்கரத்தாழ்வார் சன்னதி, தாயார் சன்னதி, ஆயிரங்கால் மண்டபம் உள்பட பல பகுதிகளில் உள்ள மேல் தளங்களுக்கு செல்ல ஸ்டீல் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கோபுரங்களின் அருகில் உள்ள குடியிருப்புகள் மாடியில் இருந்தும் பக்தர்கள் சம்ப்ரோஷ்ணங்களை காணலாம்.
சம்ப்ரோஷ்ணத்தை யொட்டி நாழிகேட்டான், ஆரியபட்டாள் மேல் தளங்கள், நாழிகேட்டான் கோபுர நுழைவு வாயில், கருட மண்டபம் மேல்தளம், ரங்க விலாஸ் மண்டபம் மேல் தளம், கார்த்திகை கோபுர நுழைவு வாயில், தாயார் சன்னதி மேற்பகுதி உள்பட பல பகுதிகளில் காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. திருவடி தெரு, ஸ்ரீரங்கம் காவல் நிலையம், சாத்தார வீதி பிரிவு ரோடு, ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையம், ரங்கா ரங்கா கோபுரம் முன்பு, வெள்ளை கோபுரம், வடக்கு வாசல், தாயார் சன்னதி உள் பட பல பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டுதல், வாகன நிறுத்துமிடங்கள் குறித்த தகவல் தெரிவிக்க வெள்ளை கோபுரம், வடக்கு வாசல், ரங்கா ரங்கா கோபுரம் மற்றும் ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையம் உள்பட பல பகுதிகளில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்கள் நிகழாமல் கண்காணிக்க 4 உத்திர வீதிகள், 4 சித்திரை வீதிகள் உள்பட பல பகுதிகளில் 15 பைக் ரோந்து குழுக்கள் மற்றும் சாதாரண உடையில் குற்றப்பிரிவு போலீசாரர் நியமிக்கப்பட்டுள்ளனர். மாந கர போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர் தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் உடல் நலன் கருதி சேஷராய மண்டபம், ரங்க விலாச மண்டபம், கருட மண்டபம் மற்றும் தாயார் சன்னதி ஆகிய இடங்களில் அவசர சிகிச்சைக்காக மருத்துவ குழுக்கள் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மேல் சிகிச்சைக்கு வசதியாக தனியார் மற்றும் அரசு ஆம்புலன்ஸ்களும் கோவில் வளாகங்களிலும், பழைய பஸ் நிலையம், அம்மா மண்டபம் உள்பட பல பகுதி களிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
மகாசம்ப்ரோஷ்ணத்தை பக்தர்கள் தரிசிக்க வசதியாக ராஜகோபுரம் முன்பு, ஆயி ரங்கால் மண்டபம், தென் கிழக்கு உத்திர வீதி சந்திப்பு, தென் மேற்கு உத்திர வீதி சந்திப்பு, வடகிழக்கு உத்திர வீதி சந்திப்பு ஆகிய இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மகாசம்ப்ரோஷ்ணத்தை யொட்டி நாளை (18–ந்தேதி) திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்றும் இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 5–ந்தேதி வேலை நாள் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. எனினும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள கரூவூலம், சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு செயல்படும் என்று கலெக்டர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment