Pages

Monday, November 30, 2015

உதவி பேராசிரியர் தேர்வுபட்டதாரிகள் ஓராண்டு காத்திருப்பு


அரசு இன்ஜி., கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு அறிவித்து ஓராண்டாகியும் தேர்வு நடத்தாததால், விண்ணப்பதாரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.


தமிழகத்திலுள்ள இன்ஜி., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், காலியாக இருந்த, 139 உதவி பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த, ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டது.முதுகலை பட்டத்துடன், எம்.பில்., ஸ்லெட், நெட், முடித்தவர்கள் என, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகள், விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வு, கடந்த, 2014, அக்டோபரில் நடத்தப்படும் என அறிவித்து, அதற்கான பாடத்திட்டமும் ஆன்லைனில் வெளியிட்டிருந்தனர். ஆனால், எம்.பில்., மட்டும் முடித்தவர்கள், உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடாது என, ஸ்லெட், நெட் முடித்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அதேசமயம், 2009க்கு முன், எம்.பில்., படிப்பு முடித்தவர்களுக்கு ஸ்லெட், நெட் தேவையில்லை என, மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது. தற்போது, ஓராண்டுக்கு மேல் ஆகியும் எழுத்து தேர்வு பற்றி எந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் கூறும்போது, ஸ்லெட், நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, உதவி பேராசிரியாக பணியாற்ற முடியும் என, நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது.

ஆனாலும், இன்னும் தேர்வு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை,என்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சட்டப் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, அரசிடமிருந்து அனுமதி வந்தால் தேர்வு அறிவிக்கப்படும், என்றனர்.

No comments:

Post a Comment