Pages

Tuesday, September 1, 2015

கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி

காஞ்சிபுரம் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தக் கண்காட்சி, இரு நாள் நடைபெற்றது. கண்காட்சியில் 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான பிரிவில் தனிநபர் படைப்புகள், 8-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பிரிவில் 2
மாணவர்களால் உருவாக்கப்பட்ட படைப்புகள் என 456 மாணவர்களின் 169 படைப்புகள் இடம்பெற்றன.


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா கண்காட்சியைத் தொடக்கி வைத்தார். இதில், ஆழ்துளைக் கிணற்றில் சீசா முறையில் தண்ணீர் இறைத்தல், நியூட்டன் 3-ஆம் விதியின்படி ராக்கெட் ஏவுதல், பெர்னோலி தேற்றம் தத்துவத்தில் நீரை மேல்நோக்கி இயக்கி, அதில் பந்தைச் சுழலச் செய்வது என்பன உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

இதேபோல், செப்டம்பர் 2, 3-ஆம் தேதிகளில் செங்கல்பட்டு கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற உள்ளது. இதில், வெற்றி பெரும் மாணவர்களின் படைப்புகள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கும். மாவட்ட அளவில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறும் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா.

No comments:

Post a Comment