பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு அனைத்துப் பகுதி நேர ஆசிரியர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான்கேட் பகுதியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க மாநிலத் தலைவர் முருகதாஸ் தலைமை வகித்தார். இதில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கை:
கடந்த 2011 நவம்பர் மாதம் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மூலம் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, 2012 மார்ச் மாதம் வேலைவாய்ப்பக பதிவு, இனச் சுழற்சி முறை, உயர் கல்வித் தகுதி, நேர்முகத் தேர்வு மூலம் தமிழகம் முழுவதும் 16,549 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அனைத்துப் பகுதி நேர ஆசிரியர்களையும், பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்றி, பணி நிரந்தரம் செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகத்திடம் புகார் மனு அளித்தனர். இதில், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கழக மாநிலத் துணைத் தலைவர் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் சீனுவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment