Pages

Tuesday, September 22, 2015

பாமக சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2016 வரைவுத் தேர்தல் அறிக்கை
ஆசிரியர் & அரசு ஊழியர் நலன்;
*புதிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படும்.


*7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
*இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஊதியத்தில் 15% சேர்த்து வழங்கப்படும்.
*அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும்.
*மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும்.
*அனைத்து நிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் காணப்படும் முரண்பாடுகள் களையப்படும்.
*அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வு கிடைப்பது உறுதி செய்யப்படும்.
*பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்கள், அரசுத் துறைகளில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
*அரசு ஊழியர்களின் குறைகளை கேட்டறிந்து சரி செய்வதற்காக அரசுத்துறை செயலாளர் தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும்.
முக்கிய அம்சங்கள்;
கல்வி;
*கல்விக்கான நிதி ஒதுக்கீடு மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 4% ஆக அதிகரிக்கப்படும். அதாவது கல்விக்கு இப்போது ஒதுக்கப்படும் நிதி இரட்டிப்பாக்கப்படும்.
*மழலையர் வகுப்பு முதல் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். அதன்படி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே நிர்ணயித்து செலுத்தும்.
*மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசின் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு
பள்ளித் தர இயக்குனர் நியமிக்கப்படுவார்.
*மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், ஆந்திரம் மாநிலப் பாடத்திட்டங்களில் உள்ள சிறந்த அம்சங்களை கண்டறிந்து அவற்றை உள்ளடக்கிய புதியக் கல்வித் திட்டம் உருவாக்கப்படும். இதற்காக வல்லுனர் குழு அமைக்கப்படும். புதியக் கல்வித் திட்டம் 2017 ஆம் கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

*தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள வசதியாக 9&ஆம் வகுப்பிலிருந்தே சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
*- அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதிய அடிப்படையிலும் பணியாற்றும் கணிணி ஆசிரியர்களும், பிற சிறப்பு ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள்.
*தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வகை செய்யப்படும்.
*திறன் சார் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும். அதன்படி 11 ஆம் ஆண்டில் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிப்பதற்கான பயிற்சிப் பாடம் கூடுதலாக சேர்க்கப்படும். அது மாணவர்கள் படிக்கும் விருப்பப்பாடம் சார்ந்ததாக இருக்கும்.
*பள்ளிகளில் தற்போது செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி மேலாண்மை குழுக்களாக மாற்றப்படும். பள்ளியின் தேவைகள் தொடர்பான முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்படும்.
*தமிழ் வழிக் கல்வி முறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
உயர்கல்வி;
*பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் திறன்சார் கல்வி கல்லூரிகளுக்கும், பல்தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும் நீட்டிக்கப்படும். கல்லூரிப் படிப்பு முடிக்கும் போது வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
*ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு பல்கலைக் கழகம் தொடங்கப்படும்.
*தமிழகத்தில் 6 ஒருமை பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். ஆராய்ச்சிகளை செய்வது மட்டுமே இவற்றின் முதன்மை நோக்கமாக இருக்கும்.
*அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மருத்துவக் கல்லூரியும், ஒரு சட்டக்கல்லூரியும் தொடங்கப்படும்.
*தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களும் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திலும் ஐ.ஐ.டி,க்கு இணையான ஓர் உயர் தொழிட்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.
*பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும். அவற்றில் குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களாக்கப்படுவர்.

No comments:

Post a Comment