Pages

Saturday, September 19, 2015

எம்.பி.பி.எஸ்., படிப்பு 21ல் சிறப்பு கலந்தாய்வு

சென்னை:சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, பொதுப் பிரிவினருக்கான, எம்.பி.பி.எஸ்., சிறப்பு கலந்தாய்வு, வரும், 21ம் தேதி நடக்கிறது.தமிழகத்தில், மாநில ஒதுக்கீட்டிற்கான, 2,167 இடங்கள், இரண்டு கட்ட கலந்தாய்வுகளில் நிரம்பின. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள் திரும்ப கிடைத்ததும், இம்மாத இறுதியில், இறுதிக்கட்ட கலந்தாய்வு நடக்க உள்ளது.

சில மாணவர்கள், பொதுப் பிரிவில், 50 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில், உத்தரவு பெற்றுள்ளனர். இதற்கான சிறப்பு கலந்தாய்வு, வரும், 21ம் தேதி, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குனரகத்தில் நடக்கிறது.
'மேலும், விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது. இந்த பிரிவில், 27 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment