Pages

Saturday, May 7, 2016

தமிழ்நாட்டில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தலாம்: மருத்துவ கவுன்சில்


தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கலாம் என்று இந்திய  மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாநில அரசுகள் நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்றும் தனியார் கல்லூரிகள் நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு  இன்று உச்ச நீதிமன்ற விசாரணையின் போது விளக்கம் அளித்தது.

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி கோடை விடுமுறைக்குள் பள்ளி வாகனங்கள் ஆய்வு போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம்


கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கோடை விடுமுறைக்குள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியில் வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஐகோர்ட்டு உத்தரவு

கோடை விடுமுறை முடிவதற்குள் பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என போக்குவரத்துதுறைக்கு சமீபத்தில் நாக்பூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மும்பையில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் கோடை விடுமுறைக்குள் ஆய்வு செய்ய வட்டாரப்போக்குவரத்து அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் மும்பையில் உள்ள பள்ளி நிர்வாகங்களுக்கு கோடை விடுமுறை முடிவதற்குள் பள்ளி வாகனங்களை வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்திற்கு ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
 கோடைக்குள் ஆய்வு

இந்த ஆய்வின் போது பள்ளிவாகனங்களின் எந்திர தன்மை, வாகன பெயிண்டின் நிறம், இருக்கைகள், அவசரகால வெளியேறும் பகுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சரியாக உள்ளதா என போக்குவரத்து அதிகாரிகளால் சோதனை செய்யப்படும். இந்த ஆய்விற்கு பிறகு முறையாக பராமரிக்கப்பட்டு வரும் பள்ளி வாகனங்களுக்கு மட்டுமே மாணவர்களை ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்படும்.

இதுகுறித்து வட்டாரப்போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறும்போது, “ கோடை விடுமுறைக்குள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய நாக்பூர் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம். அதிகாரிகளின் ஆய்விற்கு கொண்டு வரப்படாத பள்ளி வாகனங்களுக்கு மாணவர்களை ஏற்றிச்செல்ல அனுமதி அளிக்கப்படாது ” என்றார்..

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு... கட்டாயம்

மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க சுப்ரீம் கோர்ட் பரிசீலனை
தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.

அதே நேரத்தில் பொது நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அரசின் கருத்தை சுப்ரீம் கோர்ட் கேட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்று ஆவணங்கள் அறிவிப்பு


சட்டசபை தேர்தலில், வாக்காளர்கள் அடையாள அட்டையாக, 11 ஆவணங்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.சட்டசபை தேர்தலில், ஓட்டு போட செல்லும் வாக்காளர்கள், தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும்.

அதை அளிக்க இயலாதவர்கள், தங்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க, மாற்று புகைப்பட அடையாள ஆவணமாக, 11 ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம். அவற்றின் விவரம்:

தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகள் தேவை: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் எம்.கலைச்செல்வி தாக்கல் செய்த மனுவில், "தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்படும் பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்' என கூறியிருந்தார்.

தபால் ஓட்டு செலவு குறைக்க தேர்தல் கமிஷன் புது முயற்சி !


தபால் செலவை குறைக்க, அனைத்து தொகுதிகளிலும் தபால் ஓட்டுப்பதிவு மையம் அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலர்கள் தேர்தலில் தபால் மூலமாக, தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்கின்றனர்.

ஓட்டை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட தொகுதிக்கு அனுப்புவது வழக்கமாக உள்ளது. தபால் ஓட்டுக்களை, அஞ்சல்
துறை மூலமாக அனுப்புவதால் அதிக செலவு ஏற்படுகிறது. செலவை கட்டுப்படுத்த, தபால் ஓட்டுப்பதிவுக்கு, சேவை மையம் அமைக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: தபால் ஓட்டு நடவடிக்கையால், தொகுதிக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்படுகிறது. செலவை குறைக்க, ஒவ்வொரு தொகுதியிலும் தபால் ஓட்டுப்பதிவு சேவை மையம் அமைக்க, உத்தரவிடப்பட்டுள்ளது.

தபால் ஓட்டுகள் நிரப்பும் வழிமுறைகள் !!!


முக்கியம்!  முக்கியம்!

தபால் ஓட்டு தாங்கள் நாளை(7.5.16) கலந்து கொள்ளும் பயிற்சி வகுப்பில் கொடுக்க உள்ளார்கள்.
அப்போது செய்ய வேண்டியவை.,

தபால் ஓட்டு பதிவு செய்யும் போது  கவனிக்க ....
முதலில்  கட்சிகளின் சின்னம்  அடங்கிய  துண்டு  சீட்டில் தங்களுக்கு  பிடித்த  சின்னத்துக்கு அருகில்  ✅       டிக் அடிக்க  வேண்டும் .

பள்ளிகளில் யோகா கட்டாயம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுருத்தியுள்ளது.


நாடு முழுவதும் பள்ளி பாடத்திட்டத்தில் யோகாவை கட்டாயம் ஆக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இத்தகவலை மத்திய ‘ஆயுஷ்’ துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக் நேற்று பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் 29.04.2016 முதல் வரிசை எண் மாறியுள்ளது, பாகம் எண், வரிசை எண் சரி பார்த்துக் கொள்ளவும்


வாக்காளர் பட்டியலில் 29.04.2016 முதல் வரிசை எண் மாறியுள்ளது, பாகம் எண், வரிசை எண் சரி பார்த்துக் கொள்ளவும்

Click here - வாக்காளர் பட்டியலை சரிபார்த்துக்கொள்ள

Friday, May 6, 2016

Annamalai university may 2016 hall ticket available


Annamalai university may 2016 hall ticket available          

Click Here

2015 - 2016 ஆம் கல்வியாண்டிற்கு கல்வித் தகவல் மேலாண்மை முறை ( EMIS ), மாணவர் தகவல் தொகுப்பு பதிவு விரைவு படுத்துதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 03. 05. 2016

SMS method format for presiding officers.


மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தன்னாட்சி பெற்ற சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில், 2016 - 17ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தன்னாட்சி பெற்ற சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில், 2016 - 17ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.பி.ஏ., - சுற்றுலா: இரண்டு ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு, சுற்றுலா மற்றும் சரக்கு மேலாண்மை பாடப்பிரிவு.

10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு முடிவு தேதி வெளியீடு!


10 மற்றும் 12 ம் வகுப்பு தேர்வு
முடிவு தேதி வெளியீடு!
சென்னை: 10 மற்றும் 12ஆம்
வகுப்புகளுக்கான தேர்வு
முடிவுகள் வெளியாகும் தேதி
அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை
செயலாளர் சபிதா விடுத்துள்ள
அறிவிப்பில், "12ஆம் வகுப்பு தேர்வு
முடிவு மே மாதம் 17ஆம் தேதி
வெளியிடப்படும். அன்று காலை 10
மணிக்கு தேர்வு முடிவுகளை
அறிந்து கொள்ளலாம்.
அதேபோல், 10ஆம் வகுப்பு தேர்வு
முடிவுகள் மே மாதம் 25ஆம் தேதி
காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
dge.tn.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in,
dge3.tin.nic.in ஆகிய இணையதளங்களில்
முடிவுகள் வெளியாகும். அதில்,
பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு
செய்து தேர்வு முடிவுகளை
தெரிந்து கொள்ளலாம்'' எனக்
கூறப்பட்டுள்ளது.

Thursday, May 5, 2016

2ஆம் கட்ட தேர்தல் வகுப்புக்குச் செல்லவில்லையெனில் ஒருமாத சம்பளம் நிறுத்தி வைக்க உத்தரவு - நாளிதழ் செய்தி


தேர்தல் பணி அலுவலர்களுக்கு ,தபால் ஓட்டு படிவங்கள் மே 7 ஆம் தேதி வழங்கப்படும்.நாளிதழ் செய்தி


10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள்: மே 6-ல் வெளியாகிறது...!!


10-ம் வகுப்பு ஐசிஎஸ்இ, 12-ம் வகுப்பு ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் மே6-ம் தேதி வெளியாகவுள்ளன.இந்த முடிவுகளை சிஐஎஸ்இசி கல்வி வாரியம் வெளியிடவுள்ளது.இதுகுறித்து சிஐஎஸ்இசி கல்வி வாரியத்தின் தலைமைச் செயலல் அதிகாரியும்,செயலருமான கெர்ரி அராத்தூன் கூறியதாவது:

கருணை மதிப்பெண்ணுக்கு எதிராக வழக்கு: பிளஸ் 2 தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் மறுப்பு


வேதியியல் பாடத்தில் இரு கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்குவதற்கு எதிரான மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் விடுமுறை கால அமர்வு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து விசாரணையை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்தது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 4.3.2016 முதல் 1.4.2016 வரை நடைபெற்றது. வேதியியல் தேர்வு மார்ச் 14-ல் நடைபெற்றது.

செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் கிடையாது: மத்திய மந்திரி தகவல்


செல்போன் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு எந்த தீங்கும் கிடையாது என்று ஆய்வில் தெரிய வந்து இருப்பதாக மத்திய மந்திரி கூறினார்.

புதுடெல்லி :

பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது, செல்போன் மற்றும் செல்போன் கோபுர கதிர்வீச்சால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் தீங்கு ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத், பதில் அளித்து கூறியதாவது:-

அரசு இசைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை


மதுரை பசுமலை அரசு இசைக்கல்லுாரியில் 2016-17ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளதாவது: இக்கல்லுாரியில் 3 ஆண்டு பட்டய வகுப்புகளான குரலிசை, வயலின், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், பரதநாட்டியம், தவில், நாதஸ்வரம், நாட்டுப்புறக்கலை வகுப்புகள் நடக்கின்றன.

13-18 வயதுள்ள, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். இசைக்கலைமணி பட்டயம் தேர்ச்சியுடன், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இளங்கலை இசையில் (பி.ஏ., மியூசிக்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு கால இசை ஆசிரியர் பட்டயப்பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இதில் 15-25 வயதிற்கு உட்பட்டோர் சேரலாம்.

Wednesday, May 4, 2016

திருத்தப்பட்ட தொகுப்பூதியம்/நிலையான ஊதியம்/ மதிப்பூதியம் பெற்று வரும் தமிழக அரசு பணியாளர்கள் தனிஉயர்வு 1.1.16 முதல் Tn gov.Fin(allowance)dept. G.O.131/2.5.2016

மே 5 முதல் 'பூத் சிலிப்' வினியோகம்


மே 5 முதல் 'பூத் சிலிப்' வினியோகம்

''வாக்காளர்களுக்கு, 'பூத் சிலிப்' வரும், 5ம் தேதி முதல், வீடு வீடாகச் சென்று வழங்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

          இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய, பூத் சிலிப் அச்சிடும் பணி முடிந்துள்ளது. அனைத்து வாக்காளர்களுக்கும், மே 5ம் தேதி முதல் பூத் சிலிப் வழங்கப்படும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள்,

வீடு வீடாகச் சென்று வழங்குவர்.

மருத்துவ நுழைவுத் தேர்வை தள்ளி வைக்க வலியுறுத்தல் !


திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் வடிவேல், செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:

மாநில கல்வி வாரிய மாணவன் மருத்துவ நுழைவு தேர்வில் பங்கேற்க முடியவில்லை. மத்திய அரசின்
பாடத்திட்டத்தில் படிப்பவரே நுழைவு தேர்வை எழுதுகின்றனர்.

இதற்காக அந்த பாடத்திட்டத்தை தமிழில் மாநில அரசுகள் பாடத்திட்டமாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் மற்றும் இதர மொழிகளிலும் நீட் தேர்வு நடத்த வேண்டும். இடஒதுக்கீடுகள் பாதிக்கப்படாத அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதனை நடைமுறைப்படுத்தி 2 ஆண்டுகளுக்குப்பின் நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும், என்றனர்.

பள்ளிக்கல்வித்துறை பாடப்புத்தகங்கள் பதிவிறக்கம் செய்யலாம் 1-12 ம் வகுப்பு வரை!


தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள பாடப்புத்தகங்கள் இந்த இணையதளத்தில் பெறலாம் 1 to 12 Std, DTE I & II year

click Here

Tuesday, May 3, 2016

ஊழியர்கள் மரணம் மற்றும் ஊனம் காரணமாக சிறப்பு சலுகை - இயலாமை ஓய்வூதியம் / 2006க்கு முன்னர் இயலாமை ஓய்வூதியம் பெறுவோர் / குடும்ப ஓய்வூதியம் சார்பான திருத்தம் வெளியீடு

மே தின வரலாறு - ஓர் பார்வை


மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே 1 உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.
மே தின வரலாறு
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.
பிரான்சில் தொழிலாளர் இயக்கம்

TAMIL UNIVERSITY TANJORE ADMISSION NOTIFICATION B.Ed 2016 Distance Education


TAMIL UNIVERSITY
TANJORE

ADMISSION NOTIFICATION
B.Ed 2016 Distance Education

*Application issue from 24.04.2016

*Cost of Application Rs.600/-

அழகப்பா பல்கலைக்கழகத்தில் B.Ed சேர்க்கை அறிக்கை !


புத்தக சுமையை குறைக்க நடவடிக்கை:பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை.


தேவையற்ற புத்தகங்களை குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.