Pages

Wednesday, April 6, 2016

ஏப்.15-க்கு மேல் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி


எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத் தும் பணியை ஏப்ரல் 15-ம் தேதிக்கு மேல் தொடங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்து உள்ளது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 15-ம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 லட் சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவி கள் தேர்வில் கலந்து கொண்டுள் ளனர். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அறிவியல் தேர்வு நாளை (வியாழக்கிழமை) நடை பெறுகிறது. 11-ம் தேதி நடைபெறும் சமூக அறிவியல் தேர்வுடன் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் முடிவடையும்.



இதற்கிடையே, பிளஸ்-2 தேர்வு ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. மார்ச் 14-ம் தேதி தொடங்கிய பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் 64 மையங்களில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தாள் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி முடிவடைந்த நிலையில், கணிதம், வேதியியல் உள்ளிட்ட இதர பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று அல்லது நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் முடிக்கவும் அதைத்தொடர்ந்து எஸ்எஸ்எல்சி விடைத்தாள் மதிப்பீட்டு பணியை தொடங்கவும் அரசு தேர்வுத்துறை முடிவுசெய்துள்ளது. 10-ம் வகுப்பு விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய மாநிலம் முழுவதும் 78 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.

No comments:

Post a Comment