Pages

Saturday, February 13, 2016

சிறுசேமிப்பு வட்டி: இனி காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம்


சிறுசேமிப்பு திட்டத்தில், இனி காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சக்திகாந்த் தாஸ் கூறியுள்ளதாவது..

சிறுசேமிப்பு திட்டத்தில் தற்போது ஆண்டு ஒருமுறை தான் வட்டி விகிதம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இனி காலாண்டுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும். இன்னும் ஓரிருநாளில் இந்த அறிவிப்பு வெளியாகும். அதேசமயம், பெண் குழந்தைகள், மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றார்.
பங்குச்சந்தை சரிவு, ரூபாயின் மதிப்பு சரிவு குறித்து அவர் கூறும்போது... உலகளவில் பங்குச்சந்தைகளும், பிறநாட்டு கரன்சிகளும் சரிந்து இருக்கும் போது அதற்கு இந்திய பங்குச்சந்தைகளும், ரூபாயின் மதிப்பும் தப்பாது. இருந்தாலும் உலகளவில் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்களை மத்திய அரசு கவனித்து வருகிறது. இத்தகைய பொருளாதார சவால்களையும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு சக்திகாந்த் தாஸ் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment