Pages

Friday, February 19, 2016

உங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கிறதா? சமையல் கியாஸ் மானியத்தை கைவிட எண்ணெய் நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ்.


உங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கிறதா? என்று கேட்டு சமையல் கியாஸ் மானியத்தை கைவிடக்கோரி எண்ணெய் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி வருகின்றன.சமையல் கியாஸ்


இந்தியா முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்களது மானியத்தை விட்டுக்கொடுத்து உள்ளனர். என்றபோதிலும் மானியத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. இதன்படி ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் பெறுபவர்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மானியம் கிடையாது என்று அறிவித்தது.எஸ்.எம்.எஸ்.

இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வருகிறது. உங்கள் அல்லது உங்கள் வாழ்க்கை துணைவரின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் இருந்தால் அரசு உத்தரவுப்படி சமையல் கியாஸ் மானியம் கிடையாது. அவ்வாறு வருமானம் இருந்தால் அதற்கான உறுதிமொழியை உங்கள் சமையல் கியாஸ் வினியோகஸ்தரிடம் கொடுத்துவிடுங்கள் அல்லது www.mylpg.in என்ற இணையதளத்தில் தெரிவியுங்கள்.மேற்கண்டவாறு அந்த எஸ்.எம்.எஸ். தகவலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.சபீதா நடராஜன் கருத்து

இதுகுறித்து இந்தியன் ஆயில் சென்னை பொதுமேலாளர் சபீதா நடராஜனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு;–வறுமை கோட்டுக்கு கீழே வராத அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மும்பையில் உள்ள இந்தியன் ஆயில் தலைமை அலுவலகத்தில் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டு வருகிறது. அதில் உங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் உள்ளதா? என்று கேட்கப்படுகிறது. இது ஒரு முன்னோடியான திட்டம். இந்த திட்டம் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment