Pages

Saturday, June 17, 2017

'ஸ்மார்ட் கார்டு' பிழை திருத்த குழு அமைப்பு

சென்னை: ''ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள பிழைகளை திருத்த, வட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று பேசிய காங்., - எம்.எல்.ஏ., விஜயதாரணி, ''ஸ்மார்ட் கார்டில் ஏராளமான பிழை கள் உள்ளன,'' என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ், ''தமிழகத்தில் இதுவரை, 1.02 கோடி ஸ்மார்ட் கார்டுகள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. 
''ஆதார் கார்டில் உள்ள தகவல்கள், அப்படியே ஸ்மார்ட் கார்டில் பதிவு செய்யப்படும் போது, மொழி மாற்றத்தில் சில தவறுகள் நிகழ்ந்துள்ளன. அதை சரி செய்ய, வட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன,'' என்றார்

No comments:

Post a Comment