தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள் நேற்று திறக்கப்பட்டன. புதிதாக கல்லுாரியில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் வரவேற்றனர்.
இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர், கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பச்சையப்பா மற்றும் மாநில கல்லுாரிகளில், மாணவர்கள், 'பஸ் டே' கொண் ட்டம் நடத்தியதில், பிரச்னை ஏற்பட்டது. மற்ற கல்லுாரிகளில் வழக்கம் போல வகுப்புகள் துவங்கின.
அரசு கல்லுாரிகளில், கல்வி கவுன்சில் கூட்டமும் நடந்தது. இதில், புதிய மாணவர்களுக்கு பாடம் நடத்தும் விதம், அவர்களுக்கான வழிகாட்டும் வகுப்புகள் குறித்து, பேராசிரியர்கள் ஆலோசனை நடத்தினர்.சில அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தி, அவர்களின், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திறன் சோதிக்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து, மாணவர்களின் நிலைக்கு ஏற்ப, அடுத்த வாரத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 அடிப்படை பாடங்களை, நினைவு கூறும் வகுப்பாக நடத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment