சென்னை: அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், முதலாம் ஆண்டில் சேர, தமிழக அரசின் சார்பில், ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்குக்கு, 1.68 லட்சம் பேர், ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 1.40 லட்சம் பேர் மட்டும், விண்ணப்பங்களை் அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்கள், அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டியிடம் சேர்ந்து விட்டதா; பரிசீலினைக்கு எடுக்கப்பட்டதா என்பதை, www.tnea.ac.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment