சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யின், 'குரூப் - 2 ஏ'
பிரிவுக்கு, வரும், 21ல் கவுன்சிலிங் நடக்கிறது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட செய்தி
க்குறிப்பு:
'குரூப் 2 ஏ'வில் அடங்கிய, நேர்முக தேர்வு அல்லாத பணிகளுக்கு, ஜன., 24ல் எழுத்து தேர்வு நடந்தது.
இதில், தேர்வு பெற்றவர்கள் பட்டியல், ஜூன், 8ல் வெளியானது. அவர்களுக்கு, வரும், 21ல்,
கவுன்சிலிங் நடக்கும். விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில்
தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment